வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

கமல் : திமுக ஊழல் கட்சி ..அழுக்குபொதியை சுமக்க மாட்டோம்..கமல்

ஆலஞ்சியார் : திமுகவுடன் கூட்டணி இல்லை திமுக ஊழல் கட்சி ..அழுக்குபொதியை சுமக்க மாட்டோம்..கமல் ..
கமலுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை ஆனால் பொதுவாக நவீன முற்போக்குவாதிகள் புதிதாய் கட்சி தொடங்குபவர்கள் அரசியல் கட்சிகள்
ஆரம்பித்தவுடனேயே திமுகவை தொடர்ந்து ஊழல்கட்சி என்பதைபோல பேசி சித்தரித்துவருவதை மறுக்கவேண்டியதிருக்கிறது..
இதுவரை எந்த வழக்கிலாவது திமுக தலைமையோ அல்லது பிரதான தலைவர்களோ நீதிமன்றத்தால் தண்டிக்கபட்டிருக்கிறார்களா .. திமுக மீது சுமத்தபபட்ட குற்றசாட்டுகளில் இந்த ஐம்பது ஆண்டுகளில் ஏதேனும் ஒருவழக்கில் ஊழல் குற்றசாட்டு நிரூபிக்கபட்டிருக்கிறதா.. கட்சி ஆரம்பிக்கறவனெல்லாம் திமுகவை ஊழல்கட்சி என்று சொல்வதின் சூட்சமம் இதுதான் .. திமுக எதிர்த்தால் தான் அறியபடுவோம் என்கிற அரசியல் அறிவு தெரிந்திருக்கிறது அவ்வளவுதான் ..

..
விடுதலை இந்தியாவின் முதல் ஊழல் குற்றசாட்டு
டி.டி கிருஷ்ணம்மாச்சாரி என்ற காங்கிரஸ்காரர் மீதுதான் நேரு அமைச்சரவையிலிருந்து பதவி விலக நேர்ந்தது பார்பனர் என்பதால் இதுவரை அந்த ஊழல்பற்றி யாரும் பேசுவதில்லை .. விடுதலை இந்தியாவில் முதல்வராக நீதிமன்றம் சென்று குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறைக்கு சென்ற பாப்பாத்தி ஜெயலலிதாவை பற்றி தியாக சீலர் அளவிற்கு பேசுகிறார்கள் அரசே மக்கள் வரிப்பணத்தில் நினைவுமண்டபம் அமைக்கிறது பாரத ரத்னா வழங்கவேண்டுமென கேட்கிற அவலமெல்லாம் நடக்கிறது தண்டிக்கபட்டு நிபந்தனை பிணையில் இருந்தவரை மத்திய அரசின் நிதியமைச்சரே நேரில் சந்தித்தார் .. அப்போதெல்லாம் வாய் திறக்காத முற்போக்கு பாப்பான் திமுகவை குறை கூறவேண்டுமென்பதற்காக ஊழல்கட்சி என்கிறார் ..
வாய்புளித்ததென்று சொல்லி திரிகிறவர்களுக்கு முடிந்தால் திமுக மீதான குற்றசாட்டை நிரூபியுங்கள் ..எந்த வழக்கையும் கண்டு அஞ்சியதில்லை ..வாய்தா வாங்கி ஓடியொளிந்ததில்லை நீதிமன்றத்தில் எனக்கு வியாதி இருக்கிறதென சலுகை கேட்கவில்லை சட்டப்படி எதிர்கொண்டு பொய்குற்றசாட்டை தவிடுபொடியாக்கி நெருப்பில் இட்ட பொன்னை போல மிளிர்கிறது திமுக ..
..
ஏதோ இவர்கள் மட்டும்தான் உத்தமசீலர்கள் போல பாவலா காட்டுகிறார்கள் கறுப்புபணம் அதிகம் புழங்கும் சினிமாதுறையில் இருந்து வந்து வாங்குகிற சம்பளத்தை கூட பாதி வெள்ளையாகவும் மீதி கறுப்பாகவும் பெறுகிறவர்கள் உத்தம நடிகனாய் வலம் வந்தால் நம்பிவிடுவார்களென காலம்போன காலத்தில் கதைத்து திரிகிறவர்களுக்கு .. அரசியல் புகலிடம் அல்ல என்பதை உணர்த்தவேண்டும் .. திமுக அழுக்காம் .. பழைமை கூட அழுக்காய்தான் தோன்றும் .. எம் பாட்டானின் அறிவு சுவடிகளை பழசை எரிக்க வேண்டுமென சொல்லி தீயிலிட்டு போகி கொண்டாடியவர்களின் வாரிசு தான் மீண்டும் அழுக்கென்று வருகிறது .. 

அரசியலில் கண்ட கழிசடைகளும் வரலாமென்ற எண்ணம் தாம் அழுக்கானது ..என்றாவது மக்களுக்காக போராடியோ பரிந்து பேசியோ அவரின் துயரங்களுக்காக வாதாடியோ அவர்களின் தேவைகளைப்பற்றிய அறிவோ இல்லாமல் சினிமா வாய்ப்பு குறைந்தவுடன் நேராக அரசியலுக்கு வந்து
திமுகவை திட்டினால் தான் அரசியலில் பிழைக்கமுடியுமென்ற பழைய யுக்தியை கையிலெடுக்கிறார்கள்.. எடுத்தவனெல்லாம் இருக்குமிடமே தெரியாமல் போனதாக தான் வரலாறு .. எச்சரிக்கை..
..
அழுக்கர்கள்..
..
ஆலஞ்சியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக