திங்கள், 25 பிப்ரவரி, 2019

ஸ்டாலின் பேச பேச கண்ணீர் விட்ட வைகோ .. இருவரும் உணர்ச்சிவசப்பட்டு அழுதனர்


tamil.oneindia.com/authors/hemavandhana : திருச்சி: முக ஸ்டாலின் பேச பேச, வைகோ உணர்ச்சிபெருக்கில் கண்ணீர்விட்ட நெகிழ்ச்சி சம்பவம் நேற்று திருச்சியில் நடந்துள்ளது.
நேற்று கலைஞர் அறிவாலயத்தில் மதிமுக வழக்கறிஞர் வீரபாண்டியன் எழுதிய தமிழின் தொன்மையும் சீர்மையும் - கலைஞர் உரை என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய ஸ்டாலின், "'மதிமுக சார்பில் கலைஞருக்கு விழாவா? வைகோவுக்கு அருகில் ஸ்டாலினா? என்று சிலருக்கு சந்தேகம். சந்தேகம் இல்லை.. பொறாமையேதான். திராவிட இயக்கத்தினர் ஒன்று சேர்ந்தால் சிலருக்கு ஒன்று சேர்ந்தால் சிலருக்கு பிடிக்கவே பிடிக்காது. எரிச்சல் வந்துவிடுகிறது.
நான் இருப்பேன்..  வயது முதிர்ந்த நிலையில் தலைவரை வைகோ சந்தித்தார். கலைஞரின் கையை அழுது கொண்டே பிடித்து வைகோ தடுமாறினார். கலைஞரும், வைகோ கையை பிடித்துக்கொண்டார்.
அந்த சோக நிலையிலும் கலைஞரிடம், ‘அண்ணா உங்களுக்கு நான் எப்படி இருந்தேனோ அதேபோல ஸ்டாலினுக்கும் என் வாழ்நாள் முழுவதும் உடன் இருப்பேன்' என்று கூறினார்.

 (இப்படி ஸ்டாலின் சொன்னபோது குரல் தழு தழுத்தது, கண்களில் ஸ்டாலினுக்கு நீர் தழும்பியது.. வைகோவுக்கும்தான்) மீறியது இல்லை அதனால் வைகோவிற்கு துணை நான் நிற்பேன்.


 கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாட்டு நலனுக்காக ஸ்டெர்லைட், முல்லைப் பெரியாறு என பல போராட்டங்களை வைகோ முன்னின்று நடத்தி வருகிறார். பொடாவில் வைகோ வேலூர் சிறையில் இருந்த போது கூட்டணி பேச சந்தித்தேன். இப்போதும் சீக்கிரம் கையெழுத்திடுங்கள் என்று சொல்ல வந்திருக்கிறேன். கலைஞர் சொன்னதை நாங்கள்கூட மீறியிருக்கிறோம். ஆனால் வைகோ எப்போதுமே மீறியது கிடையாது.






அழுது கொண்டே இருந்தார்

அழுது கொண்டே இருந்தார்

வரும் தேர்தலுக்கு மீண்டும் 40க்கு 40 பெற புயல்வேக பயணத்திற்கு வைகோ தயாராகி விட்டார். தளபதியும் போர்வாளும் ஒரே மேடையில் இணைந்திருப்பது திராவிட இயக்கத்தைக் காக்கவே இணைந்துள்ளோம்" என்று பேசி முடித்தார். இவ்வாறு ஸ்டாலின் பேச பேச இதை மேடையில் கவனித்துகொண்டிருந்த வைகோ அழுதுகொண்டே இருந்தார். ஸ்டாலின் பேசி முடிக்கும்வரை கைக்குட்டையால் கண்ணீரை துடைத்து கொண்டே இருந்தாலும் அழுகையை நிறுத்த முடியவில்லை.






திருச்சி கன்பார்ம்

திருச்சி கன்பார்ம்

ஏற்கனவே நிறைய உணர்ச்சிவசப்படும் வைகோ, இப்படி கண் கலங்கியதை தொலைக்காட்சியிலும் நேரடி ஒளிபரப்பில் பார்க்க முடிந்தது. எப்படியோ வைகோவுக்கு கூட்டணி மட்டுமில்லை.. திருச்சியும் கன்பார்ம்ட் என்றாலும், ஸ்டாலினும், வைகோவும் நேற்று ஒரே மேடையில் அழுதுவிட்டது அங்கிருந்தோரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது.







நெகிழ்ச்சி

ஏற்கனவே நிறைய உணர்ச்சிவசப்படும் வைகோ, இப்படி கண் கலங்கியதை தொலைக்காட்சியிலும் நேரடி ஒளிபரப்பில் பார்க்க முடிந்தது. எப்படியோ வைகோவுக்கு கூட்டணி மட்டுமில்லை.. திருச்சியும் கன்பார்ம்ட் என்றாலும், ஸ்டாலினும், வைகோவும் நேற்று ஒரே மேடையில் அழுதுவிட்டது அங்கிருந்தோரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக