திங்கள், 25 பிப்ரவரி, 2019

முருகானந்ததின் சானிடரி நாப்கின் பற்றிய படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. Period end of sentence

லாஸ் ஏஞ்சல்ஸ்:
Oscars 2019: It is proud moment for Tamils
Oscars 2019: It is proud moment for Tamils தமிழர் அருணாச்சலம் முருகானந்தம் பற்றிய படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.
கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் பெண்கள் மாதவிடாய் காலத்தில் படும் அவதியை பார்த்துவிட்டு குறைந்த விலையில் நாப்கின் தயாரிக்கும் எந்திரத்தை கண்டுபிடித்தார். குறைந்த விலையில் நாப்கின் தயாரிப்பதை சேவையாக செய்து வருகிறார். அவரின் வாழ்க்கை வரலாற்றை பேட்மேன் என்ற பெயரில் படமாக எடுத்து பாலிவுட்காரர்கள் கவுரவித்தார்கள். இந்நிலையில் அவரை பற்றிய பீரியட் என்ட் ஆப் சென்டன்ஸ் என்ற படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அந்த படத்திற்கு Documentary short subject பிரிவில் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இது உலகத் தமிழர்கள் பெருமிதம் கொள்ள வேண்டிய நேரம். விருதை வாங்கிய இயக்குநர் ரைகா ஜெஹ்தாப்சி கூறியதாவது,
மாதவிடாய் பற்றிய ஒரு படம் ஆஸ்கர் வென்றுள்ளது என்று என்னால் நம்ப முடியவில்லை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக