ஞாயிறு, 27 ஜனவரி, 2019

முன்னாள் அதிமுக எம்எல்ஏ பதர் சயீத் காங்கிரஸில் இணைந்தார்

tamil.thehindu.com : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பள்ளித் தோழியும், திருவல்லிக்கேணி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பதர் சயீத் காங்கிரஸில் இணைந்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பள்ளித் தோழியாக இருந்தவர் பதர் சயீத். இவர் திருவல்லிக்கேணி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வாகவும் இருந் தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து விலகி இருந்தார். இந்நிலையில், நேற்று காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த அவர், தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார். அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்ற திருநாவுக்கரசர், கட்சியின் உறுப்பினர் அட்டையை வழங்கினார். அத்துடன் அவருக்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பொறுப்பும் வழங்கப்பட்டது.

அப்போது பதர் சயீத் நிருபர்களிடம் கூறுகையில், “ஜெயலலிதா இருந்தபோது அவர் மட்டுமே தலைவராக இருந்தார். அவர் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல தலைவர்கள் உள்ளனர். கட்சியில் உரிய மரியாதை தரப்படவில்லை. அதனால்தான் அதிமுகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தேன்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக