ஞாயிறு, 27 ஜனவரி, 2019

ஜாக்டோ ஜியோ போராட்டம்- தமிழகம் முழுவதும் 422 ஆசிரியர்கள் பணியிடை நிறுத்தம்

சாலைமறியல்ஜாக்டோ ஜியோலிலுல்லா.ச vikatan : ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்டு  கைதாகி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட 422 ஆசிரியர்கள் பணியிடம் நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 25 ம் தேதி சாலை மறியலில் ஈடுபட்ட போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.  கைது செய்யப்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் காவல்துறையினர் நேற்று இரவு பல்வேறு வழக்குகளின் அடிப்படையில் நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.   அரசுப்  பணியாளர் நடத்தை விதிகளின்படி ஒருவர் கைதாகி நீதிமன்றத்தில்  48 மணி நேரம் இருந்தால் அவரை பணியிடை  நீக்கம் செய்ய வேண்டும் என்பது விதியாகும்.

அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் 422 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம்  செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர். காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் 26 ம் தேதி முதல் பணிக்குத் திரும்பினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என பள்ளிக்கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது.
போராட்டம்
  வரும் 28ம் தேதி பள்ளிக்கு வராத ஆசிரியர்களுக்குப் பதில் தற்காலிக ஆசிரியர்கள் மாதம்  ரூ 10,000 தொகுப்பூதியத்தில் நியமிக்கப்படவுள்ளனர். இந்தப் பணியிடத்திற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் பிஎட் பட்டம் பெற்றவர்களும்  அரசு  உயர்நிலை,மேல்நிலைப்பள்ளியில் விண்ணப்பிக்கலாம். அவர்கள் 28ம் தேதி பணிக்கு வராத ஆசிரியர்களுக்குப் பதில் உடனடியாக நியமனம் செய்யப்பட்டு பணி உத்தரவு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக