புதன், 2 ஜனவரி, 2019

மக்களவையில் இருந்து 24 அதிமுக எம்.பிக்கள் 5 நாட்களுக்கு இடை நீக்கம்!

மக்களவையில் இருந்து 24 அதிமுக எம்.பிக்கள் 5 நாட்களுக்கு சஸ்பென்ட்மாலைமலர்: மக்களவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததாக அதிமுகவை சேர்ந்த 24 எம்.பிக்களை 5 நாட்களுக்கு இடை நீக்கம் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டுள்ளார். புதுடெல்லி மக்களவையில் இருந்து அதிமுக எம்.பிக்கள் 5 நாட்களுக்கு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சபாநாயர் உத்தரவை மீறி தொடர் அமளியில் ஈடுபட்டதாக அதிமுகவைச் சேர்ந்த 24 எம்.பிக்கள் 5 அமர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் 374ஏ விதிப்படி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். மேகதாது அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சிக்கு எதிராக பாராளுமன்றத்தில் தமிழக எம்.பிக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த இடைநீக்கம் உத்தரவுக்கு பின்னர் பாராளுமன்றம் வாசலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக எம்பி தம்பிதுரை, ‘பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதால் கர்நாடக மாநிலத்தில் சில தொகுதிகளையாவது பிடிக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. அதனால்தான் மேகதாது அணை திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

தமிழகத்தின் உரிமைக்காக ஜனநாயக முறையிலான எங்கள் போராட்டத்துக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை’ என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக