புதன், 2 ஜனவரி, 2019

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா?

Devi Somasundaram : இந்த தகவல சரியா
தெரிஞ்சுக்காம எழுத வேணாம்னு
ரெண்டு நாளா பேசாம இருந்தேன்...கொளத்தூர் மணி அண்ணன் தந்தார்ன்னு சொல்லி ஒரு அறிக்கை முகனூல் முழுக்க சுத்துது ..இதை மணி அண்ணன் தான் தந்தாரான்னு அந்த அமைப்ப சேர்ந்த சிலரிடம் கேட்டேன்..இதோ கேட்டு சொல்றேன் தேவின்னு சொன்ன யாரும் இது வரை பதில் தர வில்லை ..
இந்த அறிக்கையை கொளத்தூர் மணி அண்ணன் வெளியிட்டதா எந்த உறுதியான தகவலும் இல்லை...ஒரு வேளை யாராவது உறுதி படுத்தினா அதன் பின் அதற்கு பதில் சொல்றேன்
.கெளசல்யா எவிடன்ஸ் கதிர் தலைமைல தான் நேற்று வரை செயல் பட்டார் . சக்திய காதலித்த போதும் எவிடன்ஸ் ஆதரவில் தான் இருந்தார் ..
ஆனா இன்று சக்தி கொளத்தூர் மணி அண்ணன் கிட்ட பர்மிஷன் வாங்கிட்டு காதலிச்ச மாதிரியும், மேட்டர் செய்த மாதிரியும் இவர்கள் அறச்சீற்றத்தை பார்த்தா நாட்ல பெண்களுக்கு இத்தனை ஆதரவும் பாதுகாப்புமான்னு புல்லரிச்சு போவுது..

இந்த தகவல பத்தி தோழர் ஒருவர் வீடியோ வா பேசி..நாம் பாதிக்க பட்ட பெண் பின்னாடி தான் நிக்கனும். அந்த பெண் வேலைல இருக்கார் , வெளில வந்தா அவமானமா இருக்கும்னு வர்ல .அது எப்ப்படி குற்ற மாகும்னு நீண்ட விளக்கம் தந்து இருந்தார்..என்ன செய்யனும் தோழர்ன்னு கமண்ட் போட்டேன் .பதிலே வர்ல...
பாதிக்க பட்ட பெண் முட்டாள் இல்ல , படித்து வேலைல இருப்பவர், தனக்கு நடந்த குற்றத்துக்கு சம்பந்த பட்டவரை தண்டிக்க கோர்ட் போக தயாரா இல்லை.. காசு குடுங்கன்னு வாங்கிட்டு இருக்கார் , அப்றம் அவர் பின்னாடி நிக்கனும்னா எனக்கு புரியல , கால் வலிக்கும் பின்னாடி சேர் போட்டு உட்கார்ந்துக்கங்க..

கெளஸி நேற்று வரை மணி அண்ணன் கஸ்டடில இல்ல, சக்தி நேற்று வரை மணி அண்ணன் கஸ்டடில இல்ல, காதலிச்சு கர்ப்பமாகி, கர்ப்பத்தை கலைச்சுட்டு 3 லட்சம் காசு வாங்கின பெண் நேற்று வரை மணி அண்ணன் கஸ்டடில இல்ல.. இன்னிக்கு எல்லா குற்றதிற்கும் பெரியார் கூட இருந்த மாதிரியே செய்யும் அலப்பரைகள் தான் ஓவரா இருக்கு.
நேற்று வரை கெளஸி சாதி ஒழிப்பு போராளின்ன்னு அவர் பேர்ல பட்டா போட்டு கொண்டவர்கள் இன்னிக்கு கெளஸி ஒரு குற்றவாளியா நிற்பது தனக்கு சம்பந்தமே இல்லாத விஷயம் மாதிரி கள்ள மவுனம் காப்பது தான் போராளிதனம்..
எவிடன்ஸ் இல்லாம குற்ற்ம் செய்வதற்கு எவிடன்ஸ்ன்னு பேர் வைத்து கொள்ள இருந்த புத்திசாலி தனம் பாராட்டுகுரியது தான்...ஆனால் நாம மட்டுமே புத்திசாலின்னு நினைச்சா என்ன மாதிரி சின்ன பொண்ணு கிட்டலாம் மொக்கை தான் வாங்கனும்...
1 . கெளஸி காதலித்து தன் காதல் கணவனை இழந்து அதற்கு காரணமான தன் குடும்பத்தை தண்டனை வாங்கி தந்தார்.பாராட்டுகள்...அதே மாதிரி தவறை தான் சக்தியும் செய்து இருக்கிறார்..கெளஸி சக்திக்கு என்ன தண்டனை தர போறார் ? .
2 .. சக்தி டிபிக்கல் தமிழக ஆணாய்
காதலித்தார், மேட்டர் செய்தார் , கர்ப்பம் கலைத்தார், கெளஸிய காதலித்தார் , கல்யானம் செய்தார், காதலித்த பெண் பஞ்சாயத்துக்கு வந்ததும் காசு குடுத்து காம்ப்ரமைஸ் செய்து கொண்டார்...இது தான் இங்க கால காலமா நடக்குது.. குந்தி வயத்துல புள்ளய குடுத்துட்டு மந்திரத்தால் வந்துச்சுன்னு ஊர ஏமாத்தின கதையை கொண்டாடும் மக்கள் தான் இவர்கள் ..
3 .. சக்தி காதலித்த பெண் , காதலித்தார், கர்ப்பமானார், கர்ப்பம் கலைத்தார் , காசு வாங்கி கொண்டார் .அடுத்த மகா பத்தினி வரிசையில் இடம் பெற தகுதி உள்ள பெண். வாழ்த்துகள் ..
4 .. கெளஸிய நேற்று வரை வழி நடத்தவர்கள் கெளஸிக்கு நல்ல அறிவை தந்து இருக்கின்றார்கள் ..பாராட்டும் அன்பும்.
5 .. கொளத்தூர் மணி அண்ணன் இந்த பஞ்சாயத்தில் ஈடு பட்டே இருக்க தேவை இல்லை...நமக்கு அதை விட பெரிய வேலைலாம் இருக்குனு நினைவில் வைங்க அண்ணே..
6 .. அட்வான்ஸ் புக்கிங்ல ரேப் செய்லாம் போராளிகளுக்கு...சக்தி காதலித்த பெண் மாதிரி இங்க எல்லாம் கேணை இல்ல. காதலித்து கர்ப்பமாகி கல்யாணம் செய்யாம ஜீவனாம்சம் வாங்கிகறதுலாம் மகா பாரதம் ஆரம்பிச்சு வச்ச வரலாரு...அங்கிட்டு டிரை செய்யவும்..
7 .. யாராச்சும் கமண்ட் போட வந்தா ...என்ன செய்திருக்கனும் என்ற கேள்விக்கு பதிலோட வரவும்..
அறச்சீற்றம் ஓவர்..
நடக்க வேண்டியத பேசுவோம்..கெளஸி க்கு தர பட்டது போல் சங்கர் சகோதரர்களுக்கு அரசு வேலை தர படனும். சங்கர் இழப்பால் பாதிக்க பட்டது அவர்கள் தான்
சங்கர் அறக்கட்டளையை அரசு தன் அதிகாரத்தில் எடுக்கனும்.... சங்கர் பேரை சொல்லி வசூலிக்க பட்ட காசு சாதி யால் பாதிக்க பட்டவர்களுக்கு செலவு செய்ய படனும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக