புதன், 26 டிசம்பர், 2018

திருமுருகன்-அஸ்வனி மருத்துவமனை- மருத்துவர் சடையவேல் - செளந்தர கைலாசம் - ஈழம் - இந்திய உளவுத்துறை - டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை.

mani_megalai என்பவர் மே-17 திருமுருகன் திருவிளையாடலும், அஸ்வினி மருத்துவமனை ரகசியமும் என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரை
ஜெயலலிதாவின் அப்போலோ இரகசியத்தை விட... திருமுருகன் அஸ்வினி மருத்துவமனை இரகசியம் மிகவும் சுவாரஸ்யமானது... சிறையில் அவர் மிக
மோசமான சித்தரவதை செய்யபட்டது போலவும் ஸ்லோ பாய்சன் கொடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பது போலவும் 17சோசியல் மீடியா
குஞ்சுகள் வைரல் அடிக்க ,நம்பிய நம் நக்கீரரே பதிவு செய்ய திருமுருகனின் டிஆர்பி ரேட் அடுத்த கட்டத்திற்கு எகிறுகிறது.ஆனால் அடுத்தநாள்
திருமுருகன் உச்சரிக்க தெரியாத தமிழில் நாங்கள் செய்வோம் என உணர்ச்சி முழக்கத்தோடு சிறையில் இருந்து வெளிவர நெற்றிக்கண்ணே அதிர்ந்து போகிறது என்னடா நாம் போட்ட செய்தியில் குற்றமா?உயிருக்கு போராடியவர் புரட்சிபுயலையே மிஞ்சுகின்ற வேகத்தோடு வெளிவருகிறாரே என்ன ஆச்சர்யம்! அதுமட்டுமா அடுத்த காட்சி அதையும் தாண்டியது,அது ஒரு படலம் ஆஸ்பத்திரியில் கானும் படலம், எல்லோரும் போய் வருகிறார்களே என்ற மரியாதைக்கு தளபதியும் போய் வந்தார்.விவரம் அறிந்த கொளத்தூர் மணி ஒதுங்கி கொண்டார். 3 லட்சம் செலவில் ஜெனிவா சென்று அங்கு சாப்பிட பைசா இல்லாமல் பஞ்சத்தில் அடிபட்டபோது வந்த வயித்து புண்ணுக்காக ஜெலுசில் மாத்திரை சாப்பிட வேண்டிய திருமுருகன், 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ராஜீவ் வழக்குகாரர்களை விட பெரும் வீரர் என வேலூர் சிறையில் உயிருக்கு குறி வைக்கபட்டதால், அஸ்வினி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 25 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார் என்று.. தமிழ் பெருங்குடி மக்கள் நம்பவைக்கபட்டு வருகிறார்கள்...

ஆனால் உண்மை இன்னும் சுவாரஸ்யமானது 1970 ஆண்டில் இருந்து ஈழபோரட்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள இந்திய உளவுத்துறையின் இரகசிய அலுவலகமாகவே ப.சிதம்பரமதின் மாமியார், நளினி சிதம்பரத்தின தாயார் செளந்தர கைலாசம் அவர்களின் அஸ்வனி செளந்தர மருத்துவமனையின் ஒரு பகுதியாக இருக்கும் வீடு செயல் பட்டு வருகிறது... சுமார் 40 ஆண்டுகளாக பல சூழ்ச்சிகளும், சதி திட்டங்களும் வகுக்க பட்ட இடம்... ஆன்ட்டன் பாலசிங்கம் கூட சில இடங்களில் இராதாகிருஷ்ணன் சாலை குறித்து குறிப்பிட்டிருப்பார்.. அதே சாலையில் தான் டிஜிபி அலெக்சாண்டர் அலுவலகம், பழைய உட்லண்ட்ஸ் ட்ரைவின் ஓட்டல்(இன்றைய செம்மொழி பூங்க) சோழா நட்சத்திர ஓட்டல்.. இந்த இடங்களில் தான் அனைத்து ஈழ போராளி குழுக்களுக்கும் உளவுத்துறை சந்திப்புகள் நடைபெற்றது. குறிப்பாக செளந்தர கைலாசம் அவர்களின் வீடு இந்த இடங்களுக்கெல்லாம் மையப்புள்ளி.. அன்றைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்களின் ஈழம் சம்மந்தமான அத்தனை முடிவுகளும் உளவுத்துறையால் இங்கிருந்து தான் நடைமுறை படுத்தப்பட்டது.. அன்று பழ.நெடுமாறன் உள்ளிட்டு பல்வேறு ஈழ ஆதரவாளர்களை அடிக்கடி உளவுத்துறை அழைத்து பேசிய இடமும் இதுதான்.. புலிகள் இந்திய அரசுடன் உறவை முறித்துக் கொண்டு சுயமாக விடுதலை போராட்டம் கட்டியமைத்த போது இதர விடுதலை குழுக்கள் இந்திய உளவுத்துறையின் கட்டுபாட்டில் இருந்தது இதே போயஸ் தோட்ட இல்லம் தான்
2009 போர் முடிவுற்ற உடனே ஹோம் ஆப் ஹியூமன் ரைட்ஸ் அமைப்பின் இயக்குநர் செரின் சேவியர் என்ற கனடாவின் குடியுரிமை பெற்ற இலங்கை பெண்மணி சென்னை வந்து இங்கு இருந்த அரசியல் தலைவர்களையும் அதே அஸ்வனி செளந்தரராஜன் மருத்துவ மனை இனைந்தது இருக்க கூடிய வீட்டில்தான் சந்தித்தார்.. அப்போது பெரும் அரசியல் கட்சிகள் தொடங்கி சிறு தமிழ்த்தேச இயக்ங்களில் தலைமை வரை அனைவரையும் சந்திக்க முயற்சியில் ஈடுபட்டார் (பா,சிதம்பரம் அப்போது 2009 தேர்தலில் தோல்வி அடைந்து இரகசியமாக வெற்றி பெற்று மந்திரி ஆகியிருந்த சமயம்) தமிழகத்தில் இருந்த புலம்பெயர் ஈழதமிழர்களையும் சந்தித்த முயற்சி செய்த போது ஈழதமிழர்கள் இவரை சந்திக்க மறுத்துவிட்டானர்.. அதற்கு பின் அவ்வப்போது அவர் சென்னை வந்து தங்கி முற்றுப்புள்ளியா என்ற திரைப்படம் இந்த வீட்டில் இருந்துதான் எடுத்தார்.. திருமுருகன் நண்பர்கள் உட்பட பலர் இப்படத்தில் வேலை பார்த்தனர்.
1970 களில் செளந்தர கைலாசம் இந்திராகாந்தி அவர்களுடைய நெருங்கிய வட்டத்தில் இருந்தவர்.. இன்றும் அவருடைய மகன் டாக்டர் சடையவேல்(ப.சிதம்பரமதின் மைத்துனர், நளினி சிதம்பரத்தின உடன் பிறந்த அண்ணன்) அவர்கள் இந்த மருத்துவ மனையின் இயக்குனர்.. அதுமட்டுமல்ல இன்றும் மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருது தேர்வு குழு உள்ளிட்ட பல்வேறு கெளரவ பொருப்புகளிளும் உள்ளார்.. திருமுருகன் உணவு ஒவ்வாமைக்கு 25 நாட்கள் மருத்துவமனையில் இருந்ததார் என்று தமிழ்ச் சமூகம் நம்பவைக்கப்பட்டது.. ஆனால் உண்மை அஸ்வனி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் சடையவேல் அவர்களின் ஏற்பாட்டில் இந்திய உளவுத்துறை - திருமுருகன் - ஈழம் - தமிழக அரசியல் குறித்த சதித்திட்டம் தீட்டபட்டது
. இந்தியா உளவுத்துறை பிரதமர் மோடிக்கு தெரியாமல் தன்மை கொலை செய்ய முயற்ச்சி செய்கிறது என்று ஸ்ரீசேனா கூறியது.. போன்ற சூழலில் இலங்கை அரசியல் இந்திய கைபிடியில் இருந்து நழுவும் சூழலில் அதை மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபடும் போது தமிழக அரசியல் இயக்கங்கள் அதற்கு முரணான திசையில் செல்ல கூடாது என்று அதற்கான திட்டமிடலும். இந்த இயக்கங்களுக்கு என்ன அரசியல் திசைவழியில் திசைதிருப்ப வேண்டும் என்று திருமுருகனுக்கு அசைன்மென்ட் வழங்க பட்டுள்ளது...
சில ஆண்டுகளுக்கு முன்பு திருமுருகனின் உற்ற நண்பனாக இருந்து செயல்பட்டு வந்த உமர் கூட திருமுருகன் ரகசியம் அறிந்தவர் அல்ல டப்ளின் தீர்ப்பாயம் உள்ளிட்ட விசயங்களில் திருமுருகனின் இந்திய ஆதரவு பற்றி சுமார் 400 பக்க புத்தகத்தில் கேள்வி எழுப்பினார்.. 2013ல் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா இலங்கை அரசின் மீதுபோர்க்குற்றம் தெடர்பாக தீர்மானம் கொண்டுவந்து அந்த தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு இலங்கை-சீனா-இந்தியா ஒரே அணியில் நின்றது அதே திசையில் தான் திருமுருகன் நின்றார்.. தீர்மானத்தை எதிர்த்து நின்ற நாடுகளுக்கு இடையே பல முரண்பாடுகள் இருந்தாலும் வேறு வேறு காரணம் சொல்லி தீர்மானத்தை தோற்கடிப்பதில் ஒற்றை புள்ளியில் நின்றது.. அதேபோல திருமுருகன் அமெரிக்க இந்திய உள்ளிட்ட 20 நாடுகள் ஐநா சபையின் உதவியுடன் நடத்திய இனப்படுகொலை ஆகவே.. ஐநா சபையும் அமெரிக்காவும் இனப்படுகொலையின் பங்காளிகளே ஆகவே ஐநா சபை என்ற கூட்டு குற்றவாளியே குற்றத்தை விசாரிக்க முடியாது.. அமெரிக்கா என்ற குற்றவாளி இனப்படுகொலை என்று சொல்லாமல் போர்க்குற்றம் என்றுதான் தீர்மானம் கொண்டுவருகிறான் ஆகவே இதை திருத்த வேண்டும் என்று மட்டும் கூறாமல் அந்த தீர்மானத்தை எரிக்க வேண்டும் என்று லயோலா மாணவர்கள் போராட்டத்தை திசைதிருப்பி தீர்மான நகல் எரிப்பு போராட்டம் நடத்தினார்.. ஆனால் அதே திருமுருகன்தான் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திர வாடிக்கையாளராக மாறினார்.. அதுமட்டுமல்லாமல் தான் கைது செய்ய படும் போது, "AC சார் நான் ஐநா சபையில் உங்களை பற்றி ரிப்போட் பன்னுவேன் சார்" என்று கூறினார். அத்தீர்மானம் கொண்டு வர பாடுபட்ட அத்துணை ஈழதமிழர்களின் உழைப்பை கொச்சைபடுத்தி நாசம் செய்தார்..
2009 வரை ஈழமோ தமிழகமோ எந்த உரிமை சார்ந்த போராட்டத்தில் துளி பங்கு கூட இல்லாத திருமுருகன் திடிரென்று 2009 பிப்ரவரி மாதத்தில் இருந்து போராளி அவதாரம் எடுக்கிறார்.. தீக்குளித்த முத்துக்குமார் மரணமடைந்த 10 நாட்களில் முதலில் மணியரசன் மகன் செந்தமிழன் அவர்கள் துவங்கிய இளந்தமிழர் இயக்கத்தில் நிறுவனத் தலைவர்களில் ஒருவராக ஆக முயற்சி எடுக்கிறார்... அது முடியாமல் போகவே பிப்ரவரி மாதம் இறுதிக்குள் மாவோயிஸ்ட் பின்னனி கொண்ட சதிஸ் சை பிடித்து முத்துக்குமார் மக்கள் எழுச்சி இயக்கத்தில் நிறுவன தலைவர்களின் ஒருவராக முயற்சியில் இறங்கினார்.. பாராளுமன்ற தேர்தலில் 2009 ஏப்ரலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸை தோற்கடிப்போம் சிதம்பரதை தோற்க்கடிப்போம் என்ற காங்கிரஸ் எதிர்ப்பு பிரச்சாரம் நடந்தபோது அதனை தலைமை தாங்கிய 10 மேற்பட்ட நபர்கள் கைதுசெய்ய பட்டு சிறையில் இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அங்கும் சில குழப்பம் ஏற்படுத்த முயற்சித்திருக்கிறார் 10 நாட்கள் கழித்து சிறையில் இருந்து வெளிவந்த நபர்கள் இவரது நடவடிக்கையை கண்டிக்கவே.. , காரைக்குடி மைக்கேல் உள்ளிட்ட சிலரை தூண்டி விட்டு முத்துக்குமார் மக்கள் எழுச்சி இயக்கத்தில் குழப்பம் விளைவிக்கிறார்.
பின்னர் நாம் தமிழர் என்ற கட்சி துவங்க பட்ட போதும் அதன் நிறுவன ஆலோசனை கூட்டத்தில் இயக்குனர் சீமான், பாதர் ஜகத்கஷ்பர், மருத்துவர் எழிலன், புதுக்கோட்டை முத்துக்குமார், காரைக்குடி மைக்கேல், திருமுருகன், இராஜிவ்காந்தி, அனைவரும் இருந்தனர். அக்கூட்டத்தில் தான் மதுரையில் முதல் பொதுக்கூட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.. முதல் கூட்டத்திலேயே மருத்துவர் எழிலன் பெரியார் குறித்த நிலைப்பாட்டில் முரண்பட்டு ஒதுங்கி கொள்கிறார்.. மதுரை பொதுக்கூட்டத்தில் மேடையில் இருந்து பாதர் ஜகத் கஷ்ப்பர் அவமான படுத்தப்பட்டு வெளியேறுகிறார்.. மதுரை பொதுக்கூட்டம் வரை நாம் தமிழர் கட்சியில் சில வேலைகள் செய்து கொண்டே முக்கிய பொருப்புகளை கைப்பற்ற முயற்சியில் இருந்த திருமுருகன் ஜகத்கஷ்பர் நிலைமை பார்த்த பின்பு அங்கும் ஒன்றும் செய்ய முடியாது என்று வெளியேறி மே17 ஐ நிறுவினார்
அதற்கு பிறகு இராஜா ஸ்டாலின், பிரவின், லேனகுமார், ஓவியர் புருசோத், (புலி எதிர்ப்பாளர்கள், எழுத்தாளர் வளர்மதி அருள்முருகன்) உமர் என்று ஒரு குழு உருவாக்கப்பட்டது.. திருமுருகன் வழியாக இந்த குழு ஈழபோரட்டத்திற்கு எதிரிகள் என்று ஒவ்வொரு காலத்திற்கும் ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்தை எதிராக கட்டமைப்பதில் தொழிலாக செய்து கொண்டிருந்தது. சீன எதிர்ப்பு,ஏர்டெல் எதிர்ப்பு இந்து பத்திரிகை எதிர்ப்பு, காலச்சுவடு எதிர்ப்பு, அருந்ததிராய் எதிர்ப்பு என்று ஈழபோரட்டத்திற்கு இவர்கள் தான் முதன்மை, எதிரிகள் திசைதிருப்பினார். சீனாவின் பொருளாதார அடியால் தி இந்து ராம்.. சீனாவின் கைக்கூலியாக செயல்பட்டது போல் சீன முற்றுகைகுள் இந்தியா என்று பீதியை ஏற்படுத்திய இந்திய பொருளாதார அடியாலையும் தமிழ் பெருங்குடி மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் டெல்லியில் தங்கியிருந்த எழுத்தாளர் வளர்மதி மிக தீவிரமான புலி எதிர்ப்பாளர் ஆனால் அவர்தான் மே17 இயக்கத்தின் ஆஸ்த்தான அரசியல் ஆலோசகர் அவர் டெல்லியில் இருந்து அந்த குறிப்பிட்ட காலகட்டத்தையிம் அவருக்கு டெல்லியோடு அதிகார மய்யத்தோடு இருந்த உறவு மிகரகசியமானது... அதேபோல் சார்லஸ் ஆண்டணி? என்ற புனை பெயர் கொண்ட நபரோடு இனைந்து புவிசார் அரசியல் புருடாக்களை எழுதி ஜாட்டுகள் மத்தியில் சோகால்டு அறிவாளியாக மாறமுயற்சித்து, இன்று திராவிட அரசியலின் ஏகபோக பிரதிநிதியாக தன்னை மாற்றிக் கொள்ள முயற்சிசெய்யும் ,திருமுருகன் யார்?.அமெரிக்க அரசு தன்னுடைய அரசு ஆவணங்களில் மலையாள மாஃபியா என்ற வார்த்தையை பயன்படுத்தியதை விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே அம்பலப்படுத்தி இருந்தார் அதே வார்த்தையை அதற்கு முன்பிருந்தே அவர் பயன்படுத்தி.. மலையாள மக்களுக்கு எதிரான கோபம் தமிழாக பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்.. MK.நாராயணன், சிவசங்கர் மேனன், சதீஷ் நம்பியார், போன்ற மலையாளிகள் தமிழர்களை கொன்றார்கள் இந்திய அரசை வைத்து தூண்டி ஈழ இனப்படுகொலையை நிகழ்த்தினார்கள் என்று இந்தியாவை மறைத்து மலையாள எதிர்ப்பு என்று மாற்றியவர்தான் இந்த திராவிட காவலர் இது மட்டுமா திராவிடத்தை விமர்சிக்கும் சீமானிடமிருந்து திராவிடத்தை காக்கும் புதிய கேரக்டரை ஏற்றுள்ளார்..2009 வரை யாரென்றே தெரியாதவர் திடீர் ஈழப்போராளி,இப்பொழுது திராவிட நடிகர் திலகமாக மாறியுள்ளார்..ஏறிவந்த சீமான் எட்டி உதைத்ததை நினைத்து திராவிட இயக்கத்தவர்க்ளிடம் உள்ளகுமறல் உண்டு,இன்றோ இன்னொரு காப்பாளர்.இதுவரை ஈழத்தை கலைத்தார்கள்,திசைதிருப்பினார்கள்,அடுத்து பெரியாரிய இயக்கங்களை நோக்கியா,பார்ப்போம் அஸ்வினி சந்திப்பில் வெளிவராத புகைப்படங்களில்தான் முழுக்காட்சி விடியும்
இக்குழுவில் இருந்த சிலர் உண்மை விளங்கும் போது வெளியே வந்தனர் ஆனால் உண்மை அறியாதவர்களும் இயக்கங்களும் அவ் வலையில் சிக்கி வீழப்போகிறார்?
உண்மையான ஈழ விடுதலைக்காக நிற்க்கும் வெளிநாட்டுவாழ் தமிழக தமிழன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக