புதன், 26 டிசம்பர், 2018

செந்தில்பாலாஜியால் ஆபத்து!" - .. விஷப்பரீட்சையில் திமுக தலைமை?

 செந்தில்பாலாஜி  போஸ்டர்கள்
``செந்தில்பாலாஜியால் ஆபத்து!vikatan.com :
 அப்போது, அ.தி.மு.க-வில் கோலோச்சி வந்த எம்.ஜி.ஆர் காலத்திலேயே அமைச்சராக இருந்த கரூர் சின்னசாமி, இவரது உள்ளடி வேலைகளைத்  தாக்குப்பிடிக்க முடியாமல் தி.மு.க-வுக்கு வந்தார். அதே கரூர் சின்னசாமிதான் தனக்கு முன்பு செந்தில்பாலாஜி செய்த கொடுமைகளை மறந்து, தன் மூலமாகத் தி.மு.க-வுக்கு இப்போ அழைத்து வந்திருக்கிறார். ``செந்தில்பாலாஜி தி.மு.கவுக்கு வந்துள்ளதைத் தலைமை வேண்டுமானால் ரசிக்கலாம். ஆனால், அவருக்குக் கரூர் மாவட்ட தி.மு.க-வில் பதவி கொடுத்தால், எங்கபாடு அதோகதியாகிவிடும்" என்று கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளர்கள் பலரும் பதற ஆரம்பித்திருக்கிறார்கள். குறிப்பாக, மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தரப்பு ஆடிப்போய்க் கிடப்பதாக கரூர் மாவட்ட உடன்பிறப்புகள் நம் காதைக் கடிக்கிறார்கள்.
அ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளராகவும், அக்கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளராகவும் இருந்தவர் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி. அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏவாகவும் இருந்தார். ஆனால், சமீபத்தில் வெளிவந்த 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் சிக்கி, தனது எம்.எல்.ஏ பதவியை இழந்தார்.
இந்நிலையில், டி.டி.வி.தினகரனோடு ஏற்பட்ட பிணக்கு காரணமாகக் கடந்த 14-ம் தேதி 2,000 ஆதரவாளர்களோடு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அந்தக் கட்சியில் இணைந்தார். முன்னாள் அமைச்சரும், தி.மு.க விவசாய அணி மாநிலச் செயலாளருமான கரூர் சின்னசாமி மூலமாகத்தான் அவர் தி.மு.க-வில் இணைந்ததாகச் சொல்லப்பட்டது. இந்நிலையில், வரும் 21-ம் தேதி ஸ்டாலினை வைத்து கரூரில் பொதுக்கூட்டம் நடத்தி, அந்தக் கூட்டத்தில் ஒரு லட்சம் பேரை தி.மு.க-வில் இணைக்க செந்தில்பாலாஜி தரப்பு மும்முர ஏற்பாட்டில் இறங்கியிருக்கிறது. இதனால், கரூர் மாவட்ட தி.மு.க மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பலரும் அலறிக்கிடப்பதாகச் சொல்லப்படுகிறது.
கே.சி.பழனிசாமிஇதுபற்றி, நம்மிடம் பேசிய கரூர் மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் சிலர், ``செந்தில்பாலாஜி தி.மு.க-வுக்கு வந்ததை கட்சித் தலைமை வேண்டுமானால் ரசிக்கலாம். ஆனா, நாங்க குதூகலிக்க முடியலை. காரணம், `அவரால் எங்க பதவிக்கு ஆபத்து வந்துருமோ'ங்கிற பயம்தான். 2000  வரையில் தி.மு.க-வில் இருந்த செந்தில்பாலாஜி, அப்போ சாதாரண ஒன்றிய கவுன்சிலர். அப்போதைய தி.மு.க கரூர் ஒன்றியக் குழுத் தலைவர் விஜயலட்சுமியோடு அ.தி.மு.க-வுக்குத் தாவினார். அப்போது, அ.தி.மு.க-வில் கோலோச்சி வந்த எம்.ஜி.ஆர் காலத்திலேயே அமைச்சராக இருந்த கரூர் சின்னசாமி, இவரது உள்ளடி வேலைகளைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தி.மு.க-வுக்கு வந்தார். அதே கரூர் சின்னசாமிதான் தனக்கு முன்பு செந்தில்பாலாஜி செய்த கொடுமைகளை மறந்து, தன் மூலமாகத் தி.மு.க-வுக்கு இப்போ அழைத்து வந்திருக்கிறார். அதற்குக் காரணம், தி.மு.க கரூர் மாவட்டச் செயலாளர் பதவியைத் தன்னால் பறிக்க முடியாத கோபம்தான். கரூர் மாவட்ட தி.மு.க ஜாம்பவானான கே.சி.பழனிச்சாமியால் மாவட்டச் செயலாளர் பதவியைப் பெற்றவர்தான் நன்னியூர் ராஜேந்திரன். ஆனால், அவர் கரூர் மாவட்ட தி.மு.க-வை வளர்க்கப் பாடுபடவில்லை. தேய்பிறையாகக் கட்சியை வைத்திருக்கிறார். தமிழ்நாட்டிலேயே அதிக அளவு மணல் கொள்ளை இங்கேதான் நடக்குது. சாயப்பட்டறை பிரச்னை அது இதுனு ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கு.
எம்.ஆர்.விஜயபாஸ்கர்(போக்குவரத்துத்துறை அமைச்சர்)அதை எதிர்த்து போராட்டமோ, அறிக்கையைக்கூட விட்டதில்லை நன்னியூர் ராஜேந்திரன். இந்நிலையில்தான், தன்னோடு தி.மு.க-வுக்கு வந்த ஈரோடு முத்துசாமி அங்கே மாவட்டச் செயலாளர் ஆனதுமாதிரி, தானும் கரூரில் மாவட்டச் செயலாளர் ஆக முயன்றார், கரூர் சின்னசாமி. பதினைந்து வருடங்களாக முயன்றும் அது பலிக்கவில்லை. இருந்தாலும், விடாக்கண்டனாக, கலைஞர் இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்புவரை சென்னையிலேயே 20 நாள்களுக்கு மேல் தங்கி அதற்கான தீவிர முயற்சியை மேற்கொண்டார். காரியம் கனியும் என்கிற நிலையில் கலைஞருக்கு உடல்நலம் பாதித்து, எதிர்பாராவிதமாக மறைந்துவிட்டார். அதனால், அவரது முயற்சி பலிக்கவில்லை. அதன்பிறகு, ஸ்டாலின் தலைவர் ஆனதற்குப் பிறகு, கரூர் சின்னசாமியை  அம்மாவட்டச் செயலாளர் ஆக்க விரும்பவில்லை. அதேநேரம், அந்த மாவட்டத்தில் கரூர் சின்னசாமியை கே.சி.பி-யும், நன்னியூர் ராஜேந்திரனும் அடக்கியே வைத்திருந்தனர். `தன்னால் கைப்பற்றமுடியாத மாவட்டச் செயலாளர் பதவியை செந்தில்பாலாஜி மூலம் கைப்பற்ற வேண்டும்' என்று நினைத்துதான் அவரை, தி.மு.க-வுக்கு அழைத்திருக்கிறார். பதிலுக்கு, தனது செலவில், வரும் எம்.பி தேர்தலில் கரூர் தொகுதியில் சின்னசாமியை ஜெயிக்க வைப்பதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.

செந்தில்பாலாஜிஇதுஒருபுறமிக்க, `இந்த முறை அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் கே.சி.பழனிச்சாமி நிற்க விருப்பப்படவில்லை' என்ற தகவல் தலைமைக்குக் கிடைத்தது. வேற தகுதியான வேட்பாளரும் இல்லை. ஆனால், கட்சி மாறி இப்போது தி.மு.க-வில் இருக்கும் முன்னாள் ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் பரணி மணி அரவக்குறிச்சி தொகுதியில் வரும் இடைத்தேர்தலில் சீட் வாங்கிவிடலாம் என்று கனவு கண்டார். ஆனால், செந்தில்பாலாஜி தி.மு.க-வுக்குள் இணைந்திருப்பதன்மூலம் அதற்கு ஆப்பு வைத்திருக்கிறார். அதேபோல், செந்தில்பாலாஜிக்கு மாவட்டச் செயலாளர், தி.மு.க ஆட்சியமைத்தால் அமைச்சர் பதவி உள்ளிட்ட உத்தரவாதங்களைத் தலைமை தந்திருக்கிறதா சொல்றாங்க. அதற்குப் பரிசா, தனது செலவில், தனது உழைப்பில் கரூரில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதி மற்றும் நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க-வை வெற்றிபெற வைப்பதாக உத்தரவாதம் கொடுத்துள்ளார். ஸ்டாலினும் அதை மகிழ்ச்சியாக வரவேற்றிருக்கிறார்.
ஆனால், செந்தில்பாலாஜி அந்த உத்தரவாதத்தை முன்வைத்து, உடனேயே மாவட்டச் செயலாளர் பதவியை எதிர்பார்ப்பார். அது கிடைத்தால், இப்போது அவரோடு வர தயங்கும் கரூர் மாவட்ட அ.ம.மு.க மாவட்ட நிர்வாகிகளை தி.மு.க-வுக்கு அழைத்து, மாவட்டம் முழுவதும் தனது ஆதரவாளர்களையே மாவட்ட, நகர, ஒன்றியப் பொறுப்புகளில் நியமிப்பார். இதனால், இப்போது தி.மு.க-வில் மாவட்டப் பொறுப்புகளில் இருக்கும் நிர்வாகிகளின் பதவிகளுக்கும், இனி பதவி கிடைக்கும் என நம்பிக்கிடக்கும் ஆயிரக்கணக்கான தி.மு.க தொண்டர்களின் ஆசையிலும் ஒருசேர மண் விழும். அ.தி.மு.க-வில் இருந்தபோது, மாவட்டச் செயலாளர் பதவி கிடைத்ததும் அப்படித்தான் அவர் செயல்பட்டார். அதனால், மாவட்டச் செயலாளர் தொடங்கி கிளைச் செயலாளர்கள் பதவிவரை இப்போதைய தி.மு.க நிர்வாகிகள் தங்கள் பதவிகளை செந்தில்பாலாஜிக்காக விட்டுக்கொடுக்கும் சூழல் ஏற்படும். 2000 ம் வருஷம் தி.மு.க-வில் கரூர் ஒன்றிய துணை சேர்மன் பதவி வழங்கவில்லை என்ற கோபத்தில்தான் அவர் அ.தி.மு.க -வுக்குத் தாவினார். அதன்பிறகு, அ.தி.மு.க-வில்தான் இணையக் காரணமான அப்போதைய அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் கரூர் சாகுல் அமீதை ஓரங்கட்டினார். இப்படி, பதவிக்காக அவர் எந்த எல்லைக்கும் போவார். அதை நினைத்துதான் நாங்கள் பயந்துகிடக்கிறோம். அதேபோல், ஈரோடு முத்துசாமியைவிட கொங்கு மண்டலத்தில் செல்வாக்கான நபராக செந்தில்பாலாஜியை தி.மு.க தலைமை நினைக்கிறதா சொல்றாங்க.
கரூர் சின்னசாமி(முன்னாள் அமைச்சர்)கொங்கு மண்டலம் அ.தி.மு.க கோட்டையாக இருப்பதை உடைத்து தி.மு.க கோட்டையாக மாற்றத்தான், தான் வகித்த இளைஞரணிச் செயலாளர் பதவியை வெள்ளக்கோயில் சாமிநாதனுக்குக் கொடுத்தார், ஸ்டாலின். ஆனாலும், கொங்கு மண்டலத்தில் தி.மு.க-வுக்கு செல்வாக்கு வந்துவிடவில்லை. செந்தில்பாலாஜியை அப்படி கொங்கு மண்டல தளபதியாக ஆக்கி, கொங்கு மண்டலத்தை தி.மு.க கோட்டையாக மாற்ற முடியுமாங்கிற விஷப்பரீட்சையில் தலைமை இறங்கப்போறதாகவும் சொல்றாங்க. அப்படி அவரை ஆக்கினால், கரூர் மாவட்டத்தில் மட்டுமல்ல, கொங்கு மண்டலத்தில் அனைத்து தி.மு.க நிர்வாகிகளும், தங்கள் பதவியைக் காத்துக்கொள்ள போராட வேண்டி இருக்கும். `இன்னும் சில அதிருப்தி அ.ம.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-க்களையும் தி.மு.க-வுக்கு அழைத்து வருவதாகச் சொல்லி, கொங்கு மண்டலத்தில் முக்கியப் பொறுப்புக்கு வர முயல்வார் செந்தில்பாலாஜி. வரும் 27-ம் தேதி கரூரில் ஸ்டாலின் தலைமையில் பொதுக்கூட்டத்தை செந்தில்பாலாஜி பிரமாண்டமாக நடத்த இருக்கிறார். அதுல மாநிலம் முழுக்க அ.ம.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் சிலரை அழைத்து வந்து தி.மு.க-வில் இணைக்க முயல்வதாகவும் சொல்றாங்க. இப்போதே, `கொங்கு மண்டலத்தின் வெற்றித் திருமகனே' என்று போஸ்டர் அடிக்கிறாங்க. செந்தில்பாலாஜியின் இந்தச் செயல்பாடுகளால் எங்களுக்கு ஆப்புதான்" என்றார்கள்.
நன்னியூர் ராஜேந்திரன்(கரூர் மாவட்ட தி.மு.க செயலாளர்)இது சம்பந்தமாக, செந்தில்பாலாஜி தரப்பிரனரிடம் பேசினோம். ``அனைத்தும் கட்டுக்கதைகள். அண்ணனின் அரசியல் எதிரியான போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பு இப்படி இல்லாததைக் கிளப்பி வருகிறது. அண்ணன் எந்தக் கட்சியில் இருந்தாலும், தலைமை சொல்வதை 100 சதவிகிதம் நிறைவேற்றுபவராக மட்டுமே இருந்தார். தன்னிச்சையாக எதையும் செய்ததில்லை. யாரையும் குப்புறத் தள்ளியதில்லை. தி.மு.க-வுக்கு வந்ததற்குக் காரணம், ஸ்டாலின் தலைமை நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கைதான். அ.ம.மு.க விரைவில் இல்லாமல் போகும் சூழல் உள்ளது. கரையப்போகும் கட்சியிலிருந்து கோடிகோடியாகக் கரைத்தது போதும் என்று நினைத்துதான் தி.மு.க-வுக்கு வந்திருக்கிறார். சாதாரண தொண்டராக இருந்து கரூர் மாவட்டத்தில் தி.மு.க-வை வளர்க்க இருக்கிறார். எந்தப் பதவியையும் எதிர்பார்த்து வரவில்லை. அதேபோல், யாருடைய பதவியையும் பறிக்கப்போறதில்லை. 27-ம் தேதி மிகப்பிரமாண்டமாகப் பொதுக்கூட்டத்தை நடத்த இருக்கிறார்" என்றார்கள்.
முன்னாள் அமைச்சர் கரூர் சின்னசாமி, `` `மாவட்டச் செயலாளருக்கு நான் ஆசைப்பட்டேன், அது நடக்கவில்லை. அதனால், செந்தில்பாலாஜியை வைத்து, அந்தப் பதவியைப் பறிக்க, அவரைக் கட்சிக்கு இழுத்தேன்'னு சொல்றது பொய்க் குற்றச்சாட்டுகள். எனக்கும், செந்தில்பாலாஜி தி.மு.க-வுக்கு வந்ததற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. செந்தில்பாலாஜி தி.மு.க-வில் இணையப்போறதா கட்சி தலைமை அழைத்தது. அதனால், சென்னை சென்றேன். மத்தபடி, செந்தில்பாலாஜி நல்ல உழைப்பாளி. அவரால் கரூரில் தி.மு.க வளரும். அவரது வரவை வரவேற்கிறேன். அ.தி.மு.க-விலிருந்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு தி.மு.க-வுக்கு வந்ததற்குக் காரணம், அப்போது சசிகலா கொடுத்த நெருக்கடிதான். செந்தில்பாலாஜி காரணமில்லை" என்று அனைத்தையும் மறுத்தார்.
தி.மு.க மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், ``செந்தில்பாலாஜி தி.மு.க-வுக்கு வந்திருப்பதைக் கரூர் மாவட்டக் கழகம் சார்பில் முழுமனதாக வரவேற்கிறோம். அவர் தி.மு.க-வுக்கு வந்திருப்பது 100 சதவிகிதம் கட்சிக்கு பலம்தான். அவர் தி.மு.க-வுக்கு வந்ததைப் பார்த்து எனது பதவி பறிபோய்டும் என்று பயப்படுறதா சொல்றது அபத்தம். சில கரூர் தி.மு.க மாவட்டப் பொறுப்பாளர்களுக்கும், செந்தில்பாலாஜிக்கும் வேண்டுமானாலும் ஆயிரம் முரண்கள், பிணக்குகள் இருக்கலாம். எனக்கும், அவருக்கும் ஒன்றுமில்லை. எனக்கு 40 வருஷமா தலைவர் ஸ்டாலின்தான். 20 வருஷத்துக்கே முன்பே, `நினைவு தெரிந்த நாள் முதலாய் நீதான் எனக்குத் தலைவன். நினைவு மறையும் காலம்வரை நீதான் எனக்கு முதல்வ'னு தளபதிக்கு பேனர் வைத்தவன். அவர் என்ன சொல்றாரோ, அதைச் செய்பவர்களில் முதலிடத்தில் இருப்பவனாக இருப்பேன். என்னை எந்த நிலையிலிருந்து அவர் அதைச் செய்யச் சொன்னாலும், முகம் சுளிக்காமல் செய்வேன். ஏனென்றால், தளபதியை முல்வராக ஆக்குவதுதான் என் லட்சியம்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக