செவ்வாய், 18 டிசம்பர், 2018

Zoo மனிதன் இம்சிக்காத ஒரு இனத்தை கூட நான் இதுவரை கண்டதில்லை.

Sumathi Vijayakumar : ஒரு கற்பனைக்காக, நானும் என் குடும்பமும் ஒரு தைக் கொண்டும் நாங்கள் வீட்டைவிட்டு வெளியில் வர அனுமதியில்லை.வேறு எந்த மனிதரும் எங்களை வந்து பார்க்க அனுமதியில்லை.இப்படி ஒரு சூழலில் எங்களால் எத்தனை நாட்கள் வாழமுடியும் என்று தெரியாது. வாழ்நாளெல்லாம் இப்படித்தான் வாழவேண்டுமென்றால்!
வீட்டினுள் இருக்க வேண்டும். தேவையான உணவு மற்றும் அத்தியாவசியமான தேவைகள் அனைத்தும் வீட்டிற்கே வந்துவிடும். எக்காரணத்
இதைத்தான் மிருகக்காட்சி சாலையில் இருக்கும் ஒவ்வொரு விலங்கிற்கும் செய்துக் கொண்டிருக்கிறோம். அசைவம் சாப்பிடுகிறவர்கள் கூட தான் உண்ணும் விலங்கிற்கு அதிகம் துன்பம் தராத வகையில்தான் அதன் உயிரை பிரிக்க நினைப்பார்.ஆனால் சைவம் அசைவம் சாப்பிடுபவர்கள் என்று எந்த பாகுபாடில்லாமல் அனைவரும் தங்கள் குழந்தைகளை அழைத்து செல்ல விரும்பும் ஒரு இடம் மிருகக்காட்சி சாலை. பள்ளியில் படிக்கும் போது காட்டு விலங்குகளின் ராஜா சிங்கத்தை நான் கற்பனை செய்ததற்கும், நேரில் மிருகக்காட்சியில் நான் பார்த்த சிங்கத்திற்கும் சிறிதும் சம்பந்தமில்லை.

அதிகப்படியான மிருகங்கள் தன் இனத்துடன் கூட்டமாகவே வாழ்கிறது. அதில் யானை மிக முக்கியம். பொதுவாக யானை இறைக்காகவும் இன விருத்திக்காகவும் ஒரு நாளைக்கு மட்டும் சுமார் 60 கி மீ தூரம் நடக்கும். ஒரு காடு உருவாவதற்கு, தான் செல்லும் வழியெங்கிலும் விதைகளை பரப்பிக்கொண்டு செல்வதில் யானைகளின் பங்கு மிக முக்கியம். அந்த யானையைதான்,அதன் கூட்டத்தில் இருந்து பிரித்து தனிமைப்படுத்தி, கடவுளின் அவதாரம் என்று சங்கிலியில் கட்டி துன்பப்படுத்தி, நாம் புண்ணியமடைய ஆசீர்வாதம் பெறுகிறோம்.
சில வருடங்களுக்கு முன் 'Black Fish' என்று ஒரு ஆவணப்படம் பார்க்க நேர்ந்தது.Orca என்னும் ஒரு வகை திமிங்கலத்தை பற்றிய படம்.கூட்டமாக வாழும் திமிங்கலங்களில் இருந்து ஒரு சிறிய திமிங்கலத்தைப் பிரித்துச் சென்று அதற்கு பயிற்சி கொடுத்து, மக்கள் முன்பு காட்சிப்படுத்தப்படுகிறது. கடலில் வாழும் திமிங்கலத்தை, ஒரு சிறுதொட்டியில் (நமக்குத்தான் அது பெரிய தொட்டி) அடைத்து, தினமும் பயிற்சி கொடுக்கும் அழுத்தத்தினால்,Tilikum எனும் பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த அந்த ஆண் திமிங்கலம், சில உயிர்களை பறித்திருக்கிறது. அதில் தினமும் அதற்கு பயிற்சிக் கொடுக்கும் ஒரு பெண்ணும் அடக்கம். காட்சி நடந்து கொண்டிருக்கும் போதே மக்கள் முன்னால் நடந்த சம்பவம் அது.
அந்த திமிங்கலத்தை பிடிக்க சென்ற குழுவில் இருந்த ஒருவர் 'நான் என் வாழ்நாளில் செய்த மிகப்பெரிய பாவமாகவே அதை பார்க்கிறேன்' என்று கூறுகையில் அதில் உண்மையான வருத்தம் தெரிந்தது. தன் குட்டிகளை காப்பாற்ற ஆண் திமிங்கலங்களும் பெண் திமிங்கலங்களும் வேறு வேறு திசையில் பிரிந்து சென்று வேட்டைக்காரர்களை குழப்பியதெல்லாம் என்னை ஆச்சர்யத்தின் உச்சிக்கு கொண்டுசென்றது. முதல் முயற்சியில் தோல்வியடைந்து அடுத்த முயற்சியில் ஹெலிகாப்டர், இரண்டு கப்பல்கள், walkie talkie துணைகொண்டு Tilikum ஐ பிடிக்க முடிந்திருக்கிறது இந்த உலகின் மிக சிறந்த அறிவான மனித இனத்தால்.
மனிதன் இம்சிக்காத ஒரு இனத்தை கூட நான் இதுவரை கண்டதில்லை. உணவு போன்ற அத்தியாவசிய தேவையைத் தாண்டி, ஆடம்பரத்துக்காகவும் மூடநம்பிக்கைக்காகவும் எல்லா வகை உயிரினங்களையும் மனிதன் துன்பப்படுத்திக்கொண்டேதான் இருக்கிறான். கொம்பு அறுக்கப்பட்ட காண்டாமிருகம், harmone ஊசி செலுத்தப்படும் broiler கோழி, மாடு,பன்றி, தோலுக்காக கொள்ளப்படும் மான்,சிங்கம்,புலி என்று பட்டியல் மிக நீளம்.
மனித இனம் மட்டும் பரிணாம வளர்ச்சி அடையாமலே இருந்திருந்தால் அனைத்து உயிரினங்களும் அதன் தன்மையுடன் சமமாக வாழ்ந்திருக்கும். உடன் வாழும் சகா மனிதனையே ஏற்ற தாழ்வுடன் பார்க்கும் மனித இனம், விலங்குகளை மட்டுமா விட்டுவைக்கும் . ஒவ்வொரு செயலிலும் இயற்கையை சீண்டும் மனிதன், அந்த இயற்கையினாலேயே அழிவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக