செவ்வாய், 18 டிசம்பர், 2018

திருச்சி பேரணிக்கு அரங்க குணசேகரன் நிதி வசூலிப்பு .. பெரியார் பெயரை கூறி வசூல் வேட்டை?


Devi Somasundaram : · இது நிஜமா.... .இப்படி தனி நபர் பேர்ல எப்படி fund கலக்ட்
செய்லாம் . திராவிடர் கழகம் பார்வைக்கு வந்துச்சா ...உங்க பேர் கெட்டு போகாம இருக்கனும்னா இந்த பேரணிலேர்ந்து விலகி இருங்க ...
அது தான் திராவிடர் கழகத்துக்கு நல்லது .இல்லன்னா எக்கேடோ கெட்டு போஙக ....
  பெரியார் பேரணிக்கு அமைப்ப ரிஜிஸ்டர் செய்து சட்ட படி நிதி பெறனும் .ரிஜிஸ்டரே ஆகாத அமைப்பின் பேர சொல்லி ஒரு தனி நபர் fund கலக்ட் செய்ய கூடாது...
அவர் கலக்ட் செய்து ஏமாத்திட்டு ஓட மாட்டார் என்பது என்ன நிச்சயம்...
அப்படி ஓடினா அது பெரியார் பேருக்கு களங்கம்...
நீங்க பெரியாரை வளர்க்கறோம்னு அவமான படுத்த முயற்சி செய்றிங்கன்னு நேரடியா குற்றம் சாட்றேன்...
ஒரு அமைப்பு ரிஜிஸ்டர் செய்ய கூட நேர்மை இல்லாத நீங் க பெரியாரை வளர்ப்பேன்னு சொல்வது தான் உச்ச காமடி
ரீகன் நெ : நிச்சயமா இல்லை தான். ஆனா முதல்ல இதோட உண்மை தன்மை மேல உங்களுக்கே ஒரு சந்தேகம் இருக்க, திக-வை மட்டும் தள்ளி நிக்க சொல்றது ஏன்?
அப்ப மற்ற பெரியாரிய இயக்கங்கள் மேல உங்க நிலைபாடு என்ன? பெரியாரிய உணர்வாளர்களே திரண்டு வாருங்கள்னு திமுக, திக அல்லாத ஒரு அமைப்பு சொன்னா ஏன் சிலருக்க கடுப்பாகுது?
பெரியார் என்ன திடலின் சொத்தா?

ஆசிரியரே கலந்துகொள்ளும் நிலையில் இங்கு சிலரது பதட்டம் நகைப்பாக இருக்கிறதே அது ஏன்?
ஆமா இந்த பேரணியான மே17 ஆட்சிய புடிக்குமா என்ன?
இப்டி இன்னும் பல கேள்விகளோடு  இந்த ஊர நினச்சி சிரிச்சுட்டே பேரணிக்கு போக தயாராகுறேன்.

Mathavan Sankar உங்களுக்கு என்ன பிரச்சனை,எங்கள் பகுதியில் நான் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறேன் என்றால்  நான் நன்கொடை வசூல் செய்வேன்,, இதில் என்ன தவறு உள்ளது...
Devi Somasundaram உங்க பேர்ல வசூலிப்பது உங்க பணம் ..அதுல நீங்க குண்டு தயார் செய்தா அதுல பாதிக்க பட போவது பெரியாரின் கொள்கௌன்னு மறந்துட கூடாது

Dev JB தன் சொத்தை தமிழ் சமூக மேம்பாட்டுக்காக எழுதி வைத்து விட்டு போனவர் பெயரால், பிச்சையெடுக்கும் கூட்டம்.
 Venkatesh Ramkumar : அய்யோ உங்களுக்கு நான் எப்டின்னு சொல்லி புரிய வைப்பேன். நான் திமுகவை எதிர்க்கல. 1990 களுக்கு அப்புறம் திமுக திராவிட கொள்கைகளை வளர்க்கல.
அதோட நீட்சி தான் இப்போ புஷ்கரணி மாதிரி மூடநம்பிக்கைகளுக்கு திமுக காரங்களே பேனர் அடிக்கிறது.
நான் சொல்ல வரது ஒண்ணே ஒண்ணு தான். திமுக கட்சியை வளர்க்க ஆட்சியை பிடிக்க மட்டும் தான் அதிக மெனக்கெடுது.
திராவிட கொள்கைகளை கொண்டு போய் சேர்க்கிறதுல தவறிடுச்சி.
திமுக வளர்க்காத திராவிடத்தை திருமுருகன் காந்தி வளர்த்துட்டு இருக்கார். அவர் கொள்கை தமிழ் தேசியமா இருந்தாலும் பேசுறதெல்லாம் திராவிடமா தான் இருக்கு.
Devi Somasundaram  :மே 17 தமிழ் நாடு தமிழருக்கேன்னு தன் அமைப்ப ரிஜிஸ்டர் செய்துட்டு பேசட்டுமே.

தனி நபர் பேரில் வாங்க படும் நிதிக்கு அவர் மட்டும் உரிமையாளர் ஆகிறார்.. அந்த பணத்தில் அவர் என்ன வேணா செய்ய இயலும்...அது தவறான காரியத்துக்கு பயன்படுத்த படும் பட்சத்தில் அது யார் பேரை சொல்லி வசூலிக்க படுகிறதோ அவர் கொள்கை தான் பாதிக்கும்... அமைப்பை ரிஜிஸ்டர் செய்ங்க ..போர்ட் ஆப் டைரக்டர்ஸ் உருவாக்குங்க ...அரக்கட்டளை அமைங்க ...அதன் பேர்ல நிதி வசூலிஙக ....
அது தான் நேர்மையான செயல்...
மீதி எல்லாம் ப்ராடு தனம்...அதை பெரியார் பேரை சொல்லி செய்தா நான் எதிர்ப்பேன் .  
சமுக வலைத்தளங்களில் எழுப்படும்  கடுமையான விமர்சனங்களில் சில இவை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக