செவ்வாய், 18 டிசம்பர், 2018

மதுரையில் எய்ம்ஸ் மத்திய அமைச்சரவை முடிவு ... இனி மோடி சாடிஸ்ட் இல்லையோ?

நக்கீரன் :தமிழ்நாட்டில் எய்ம்ஸ் அமைவது எப்போது என்ற கேள்வி
நீண்டநாட்களாக இருந்து வந்தது. அதன்பின் சில மாவட்டங்களை தேர்ந்தெடுத்து அதற்கு தகுதி அடிப்படையில் மதிப்பெண் கொடுத்தார்கள். அதில் மதுரை அதிக மதிப்பெண் பெற்று எய்ம்ஸ் அமைவதற்கான சரியான இடமாக தேர்வானது. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. பின்னர் சில நாட்கள் அது பற்றிய அறிவிப்புகள் ஏதும் இல்லாத நிலையில் தற்போது மதுரை மாவட்டம், தோப்பூரில் எய்ம்ஸ் அமைய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 1,264 கோடி செலவில் எய்ம்ஸ் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எய்ம்ஸில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு 100 இடங்களும், பி.எஸ்.சி. நர்சிங் படிப்புக்கு 60 இடங்களும் ஏற்படுத்தப்படும் என்றும், 15 முதல் 20 அதிநவீன சிகிச்சை பிரிவுகள் ஏற்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 750 படுக்கை வசதிகளுடன் அமையும் எய்ம்ஸில் தினமும் 1,500 வெளிநோயாளிகள் சிகிச்சை பெற முடியும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக