புதன், 26 டிசம்பர், 2018

மணியம்மையார் ராமன் சீதை இலக்குமணன் உருவங்களுக்கு தீயிட்ட நாள்! 25.12.1974 இல்

வெற்றிச் செல்வன் : இன்றிலிருந்து சரியாக 44 ஆண்டுகளுக்கு முன்பாக
இந்தியாவையே பரபரப்புக்கு உள்ளாக்கிய அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அது இராவண லீலா. அந்த நிகழ்ச்சிக்குக் காரணம் என்ன?
அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவரான பக்ருதீன் அகமது அலி மற்றும் பிரதமர் இந்திரா காந்தி ஆகியோருக்கு அன்னை மணியம்மையார் 26.10.1974 அன்று ஒரு தந்தி அனுப்பினார்.
‘திராவிட மாவீரன் இராவணனை எரிக்கும் இராமலீலா நிகழ்ச்சியில் தாங்கள் பங்கு கொள்வது மதச்சார்பின்மை கொள்கைக்கு முரணானது மட்டுமன்று. பல இலட்சக்கணக்கான திராவிட மக்களை, அவமானப்படுத்தி ஆத்திரமூட்டும் செய்கையுமாகும். எனவே, இந்நிகழ்ச்சிக்குச் செல்லக்கூடாது. மீறியும் அதில் பங்கு கொள்வீர்களானால், இலட்சக்கணக்கான திராவிட மக்கள் தமிழ்நாடெங்கிலும் இராமன் உருவத்திற்குத் தீயிட்டுக் கொளுத்த நேரிடும்’ என்பதுதான் அது.

எனினும், மணியம்மையாரின் குரலுக்கு குடியரசுத் தலைவரோ, பிரதமரோ செவிசாய்க்கவில்லை.
மருத்துவமனையில் இருந்த மணியம்மையார் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார். நிகழ்ச்சியை நிறுத்துமாறு செய்யப்பட்ட எல்லா நடவடிக்கைகளையும் மீறி உறுதி தளராமல் இராமன், சீதை, இலட்சுமணன் ஆகிய உருவங்களுக்கு 25.12.1974 அன்று தமது கையாலேயே தீயிட்டார் அன்னையார். கைதும் செய்யப்பட்டார்.
அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு நடந்த நாள் இன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக