ஞாயிறு, 9 டிசம்பர், 2018

உடுமலை கௌசல்யா - கோவை சக்தி சுயமரியாதை திருமணம்!

.vikatan.com - s.k.premkumar- punniyamoorthy-m : சாதி ஒழிப்புப் போராளியாக வலம் வந்து கொண்டிருக்கும் உடுமலை கெளசல்யா, இன்று மறுமணம் செய்துகொண்டார்.
உடுமலைப்பேட்டை சங்கர் கெளசல்யாவை அத்தனை எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. தன் காதல் கணவரைப் பறிகொடுத்து சாதி ஆணவ கொலைக்கு நேரடி சாட்சியாக கெளசல்யா வாழ்ந்து வருகிறார். சங்கரின் கொலைக்குப் பின்னர்  சாதி ஒழிப்புப் போராளியாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, சாதிக்கு எதிராக அழுத்தமாகக் குரல்கொடுத்து வருகிறார். ஆணவக்கொலைக்கு எதிராகத் தனது உறவினர்களுக்கே தண்டனை பெற்றுக்கொடுத்தவர் கெளசல்யா. சங்கரின் பெயரில் ஒரு அறக்கட்டளையை நிறுவி, அதனைக் கவனித்து வருகிறார்.  

இந்நிலையில், இன்று கோவை பெரியார் படிப்பகத்தில் அவருக்கு இரண்டாவது திருமணம், நெருங்கிய நண்பர்கள் மத்தியில் நடைபெற்றது. கெளசல்யா `நிமிர்வு கலையகத்தின்  ஒருங்கிணைப்பாளர் சக்தியை திருமணம் செய்துகொண்டார். இவரிடம் தான் கெளசல்யா பறை இசைக் கலையை கற்றார்.  இந்த திருமணத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிறுவனர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டினன், வன்னி அரசு மற்றும் எவிடன்ஸ் கதிர்  உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர். இதில் தம்பதிகள் இருவரும் உறுதிமொழி ஏற்று தங்களின் வாழ்க்கையை தொடங்கினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக