ஞாயிறு, 9 டிசம்பர், 2018

திராவிடம் வெல்லுகையில் தமிழ்த்தேசியமும் தலித்தியமும் வென்றிருக்கும்.

சாந்தி நாராயணன் : சீமான் வழியில் பா ரஞ்சித்
இந்த இயக்குனர்களை இயக்குவது யார்?
சீமான் எடுத்துக்கொண்டது
திராவிட கொள்கையின் ஒருகூறான தமிழ் தேசியம்

ரஞ்சித் எடுத்துக்கொண்டது
திராவிட கொள்கையின் முக்கியகூறான ஆதிக்க எதிர்ப்பு, தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம்.
சீமான் செயல்படுத்த முனைவது.
சாதிய எண்ணங்களை கூர்மைப்படுத்துவது
திராவிட அடையாளத்தை மறுப்பது.
தமிழன் என்று பார்ப்பனர்களை சேர்த்துக்கொள்வது.
திமுகவுக்கு எதிரான பிரச்சாரம்
ரஞ்சித் செயல்படுத்துவது
சாதிய எண்ணங்களை கூர்மைப்படுத்துவது
திராவிட அடையாளத்தை மறுப்பது,தலித்திய அடையாளத்தை முன்னிறுத்துவது.
திராவிடத்திற்கு திமுகவிற்கு எதிரான பிரச்சாரம்.

சீமான் இயக்கம் செயல்படும் முறை
தவறான வரலாற்று தகவல்களை பரப்புதல்,
பெரியார், திராவிடத்தலைவர்களின் சாதனைகளை மறைப்பது,
ரஞ்சித் ரசிகர்கள் செயல்படும் முறை
தவறான வரலாற்று தகவல்களை பரப்புதல்,
பெரியார், திராவிடத்தலைவர்களின் சாதனைகளை மறைப்பது,
சாதனைகளுக்கு உள்நோக்கம் கற்பித்தல்.

சீமான் பிண்ணனி
ஆர்.எஸ்.எஸ்,பாஜக,பெங்களூர் குணா
ரஞ்சித் பிண்ணனி
இந்துத்துவா ஆதரவாளர்கள், பிஎஸ்பி ,தீவிர திராவிட எதிர்ப்பாளர்கள்
சீமான் யுக்தி
பெரியாரை பேசாமல் தவிர்த்தல் மற்றும் இடத்தை பொறுத்து மறுப்பது
தொண்டர்கள், ரசிகர்கள் வாயிலாக திராவிடத்தின் சாதனைகளுக்கு உள்நோக்கம் கற்பித்து திராவிட தலைவர்களுக்கு எதிரான அருவெறுப்பு பிரச்சாரம்.
ரஞ்சித் யுக்தி
பெரியாரை பேசாமல் தவிர்க்கும் மற்றும் இடத்தை பொறுத்து மறுப்பது
தொண்டர்கள், ரசிகர்கள் வாயிலாக திராவிடத்தின் சாதனைகளுக்கு உள்நோக்கம் கற்பித்து திராவிட தலைவர்களுக்கு எதிரான அருவெறுப்பு பிரச்சாரம்.
oOo
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு,
திராவிட கொள்கையாளர்களுக்கு ஒரு பாடம்.
ரஞ்சித்திடமும் முட்டிக்கொண்டு தான் குனிவேன் என்பது அபத்தம்.
oOo
திராவிடம் அனைத்து கணம் ,
தலித்தியமும் தமிழ் தேசியமும் அதன் உட்கணங்கள் தான்.
திராவிடம் வெல்லுகையில்
தமிழ்த்தேசியமும் தலித்தியமும் வென்றிருக்கும்.
தலித்தியத்தை தனியாகவும் தமிழ் தேசியத்தை தனியாகவும் வென்றெடுக்க இயலாது.
திராவிடம் தான் ஆதிக்கத்தை வீழ்த்துகிற
சமூகநீதியை வென்றெடுக்கிற , தமிழ் தேசியத்தை அடைகிற சரியான போர்ப்படை.
திராவிடம் தமிழ் தேசியம் தலித்தியம் இவைகள் குறித்த தெளிவான நேர்மறையான சிந்தனையும் நோக்கமும் ரஞ்சித்திடமோ சீமானிடமோ இல்லை.
ஆனால், தோழர் திருமாவளவனிடம் இருப்பதாக எண்ணுகிறேன்.
oOo
திராவிட கொள்கையில் கிளை என்ற பெயரில்
உலைவைக்கிற சூழ்ச்சிகளை புறம்தள்ளுவோம்.
(நம்பிக்கையான)
நட்பு சக்திகளை (மட்டும்) இணைப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக