வியாழன், 13 டிசம்பர், 2018

தி.மு.கவின் வெற்றியைத் தடுக்க பெரியார் பெயரில் பேரணி? காவிகளின் கபட நாடகம்

பூனைக்குட்டி_வெளியே_வந்துவிட்டது!
எதிர் வரும் டிசம்பர் 23 இல் பெரியார் இயக்கச் செயல்பாட்டாளர்கள் ஒருங்கிணைந்து திருச்சியில் காவி மதவாதக் கூட்டத்திற்கு எதிரான மண் தமிழ் மண்- இது தந்தை பெரியார் மண் என்பதை அறிவிக்கும் பேரணி ஒன்று நடத்தப்படப் போவதாக அறிவிப்பு கண்டதும் பல்வேறு கட்சிகள், இயக்கங்களில் பங்கேற்றுள்ள உணர்வாளர்கள் மகிழ்ச்சி அடைந்தோம்.> தந்தை பெரியாரின் இலட்சியச் சுடர் அணையாது காத்திடவும், அதனை முன் னெடுத்துச் சென்றிடவும் பல்வேறு இடர் களை எதிர்கொண்டு, காவி மதவாதத்தை எதிர்த்து தங்கள்வாழ்நாளை ஒப்படைத்து திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் ஆகிய அமைப்புகளும், மேலும் சில பெரியாரை முன்வைத்து செயல்படும் அமைப்புகளும் இதில் பங்கேற்க உள்ளதாக அறிந்து உற்சாகம்
அடைந்தோம்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வேண்டி, அவரும் ஆதரவளித்து உள்ளதும், இன நலப் போராட்டங்களில் பல துன்பங்களை ஏற்று பெரியாரே எம் சுவாசம் எனச் செயல்படும் தோழர்கள் கொளத்தூர் மணி, கோவை.கு.இராம கிருட்டிணன் உள்ளிட்டோரும், அவர்தம் தோழர்களும், கடுமையான கண்டனத் திற்குப் பிறகு திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீ யும், முதுபெரும் தோழர் ஆனைமுத்து அய்யா உள்ளிட்ட சில தமிழர் அமைப்புகளும் இதில் பங்கேற்று மதவாதக் காவிக் கூட்டத்திற்கு தமிழ்நாட்டில் என்றைக்கும் இடமில்லை என அறிவிக்கவுள்ளார்கள்

என்பதை அறிந்து தி.மு.கழகத்தில் உள்ள
எம் போன்றோர்கள் தமிழகத்தின் பல
இடங்களில் இருந்தும் சென்று கலந்து கொள்வது எனத் திட்டமிட்டுள்ளோம்.
இந்த நிலையில் இந்தப் பேரணியை
அமைப்பாளர்களாக இருந்து நடத்துபவர்
கள் யார்?
பெரியார் பற்றி
கடந்த காலங்களில் இவர்களது
செயல்பாடுகள் என்ன? கருத்து என்ன?
பேரணியின் உண்மை நோக்கம் என்ன?
என்பதான கேள்விகள் இன நலச் செயல்
பாட்டாளர்களாக உள்ள வழக்கறிஞர்,
மருத்துவர், கல்வியாளர் எனும் நிலைகளில் உள்ளவர்களால் எழுப்பப்
பட்டு வந்தது.
அதன் ஒரு பகுதியாகவே, உண்மை அறியும் நோக்கில், யாரென்றே தெரியாத நிலையிலே..விளம்பரத்தில் வந்த கை பேசி எண்ணில் நான் தொடர்பு கொள்ள வும்,அவரே..ஒருங்கிணைப்பாளர் 'அரை.குணசேகரன் ' அய்யா எனத் தெரிந்து, நடத்தப்பட்ட உரையாடலில் அவர் எந்தளவு தி.மு.கழகத்தின் மீது,RSS மதவெறி அமைப்போடு கழகத்தவரின் கல்வி நிறுவனங்களில் பயிற்சி என்று #வன்மத்தோடும்_காழ்ப்புணர்வோடும், #அவதூறு பேசினார் என்பதை அறியத் தந்துள்ளோம்.
இது அவர் மீது வழக்கு
தொடுப்பதற்கே முகாந்திரம் உள்ளது என்பது ஒரு புறம் இருக்க, இது தான்
"பெரியார் பேரணி" அமைப்பாளராக உள் ளவரின் திராவிட இயக்கத்திற்கு எதிரான
நிலைப்பாடு என அறிந்து அதிர்ச்சி அடைந்தோம்.
இந்த நிலையிலே, நமது முக நூல் தோழர்கள் நிலவினியன் மாணிக்கம்,
அதி அசுரன், எட்வின் பிரபாகரன், பெங்களூர் திராவிடரியக்கத் தோழியர்
கலைச்செல்வி உள்ளிட்ட பலரும், இவர்,
திராவிடர் கழகத் துணைத் தலைவருக்கு
அளித்துள்ள பதிவில்"1967 இக்குப் பின்,
தமிழ்நாட்டில்( திமுக ஆட்சி அமைந்த பின் எனக் குறிப்பிடுகிறார்) திராவிடர் இயக்கச் செயல்பாட்டை"கடுமையாக,
தவறாக,உள் நோக்கத்தோடு, அவதூறாக
தெரிவித்துள்ளதை முக நூலில் வெளி
யிட்டு இந்த 'பெரியார் பேரணி அமைப்பாளரின்' நோக்கத்தை அம்பலப்
படுத்திவிட்டனர்.
இந்தச் செய்திகளைப் புறந்தள்ளி
பெரியார் பேரணி வெற்றி பெற வேண்டும் என எண்ணிய நிலையில்,
இதோ......

இந்தப் பேரணி-பொதுக்கூட்ட
மாநாட்டின்நோக்கத்தை தோழர்.வாலாசா
வல்லவன் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மிகத் தெளிவாக எடுத்து
ரைத்துள்ளார். தோழர்களே! ஊன்றிப்
படியுங்கள்!
#இது தமிழகத்தை வஞ்சித்து வரும் இந்திய அரசுக்கும், பா.ச.க. , காங்கிரஸ் உள்ளிட்ட இந்திய தேசியக் கட்சிகளுக்கும் எதிரான கருஞ்சட்டைப் பேரணி!" (சாதி வெறி, மத வெறி எதிர்ப்பு ஊறுகாய் போல்...இரண்டாமிடம்..தொட்டுக் கொள்ள) அருமையான விளக்கம் கொடுத்து உள்ளார். இந்தப் பேரணி-கூட்டம் என் பது ஓர் அரசியல் நோக்கம் கொண்டது என்பதை திட்டவட்டமாக அறிவிக்கிறார். மதவாத பா.ச.க வையும் காங்கிரசை யும் ஒன்றாக வைத்து மிகச் சாதுர்யமாக சுற்றி வளைத்து கோர்த்திருப்பதை கருஞ்சட்டைகள் காணட்டும்.
அகில இந்திய அளவில் மதவாத காவிக் கூட்டத்தை அதிகாரத்திலிருந்து வீழ்த்துவதற்கு.... RSS சிந்தனை அல்லாத எவரையும் பிரதமராக ஏற்பதற்குத் தயார் என அறைகூவல் விடுத்துள்ளார் இளம் தலைவர் இராகுல் காந்தி! மதவாத காவிக் கூட்டமான பா.ச.க வும் காங்கிரசும் ஒன்றா?
கழகத் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்கள், தலைவர் பொறுப்பேற்ற நாளி லேயே.." இந்தியா முழுவதும் காவி வண்ணம் பூசிட நடக்கும் முயற்சிகளை முறியடிப்போம்" என முழங்கினாரே!

அது மட்டுமல்ல; "தி.மு.கழகத்தை வழி நடத்துவது பெரியார் திடல்" என இனப் பகைவர்களின் அடிவயிற்றில் நெருப்பு வைத்து... "பெரியாரே எமை வழிநடத்துவார்"என அறிவித்தாரே...அது காவி மதவாத சக்திகளுக்கு நடுக்கத்தைக் கொடுத்துள்ளது.

இன்று அகில இந்திய அளவில், மதவாதக் கூட்டத்தை வீழ்த்துவதற்கு ஆற்றல் மிக்க தலைவராக நிமிர்ந்து நிற்கின்ற இராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும், திராவிடரியக்க அரசியலின் நான் காம் தலைமுறையாக தலைமை தாங்கி வழி நடத்துகின்ற எழுச்சிமிகு தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களும், தி.மு கழகமும் கை கோர்த்து நிற்கின்றனர்!
அதிகார பீடத்தில் இருந்து வந்த காவிக் கூட்டம் தனது ' கடையை' கட்டிக் கொண்டு போக தயாராகி விட்டது. இந்தச் சூழ் நிலையில் வலிமை யோடு நிற்கின்ற, சாதி மதவாதத்திற்கு எதிராக, தமிழக மக்களின் நலன்கள் காக்கப்பட, காங்கிரசை உடன் அழைத்துக் கொண்டு, கம்யூனிஸ்டுகள் ஒத்துழைப்போடு மதச் சார்பற்ற ஜனநாயக சக்திகளின் துணையோடு தேர்தல் களம் நோக்கிச் செல்ல தி.மு கழகம் தயார்நிலையில் உள்ளது.

இந்த வேளையில், பெரியார் இயக்கங்களின் பேரணி....என்கின்ற முகமூடியை அணிந்து கொண்டு, இந்தப் பேரணியின் முதல் நோக்கமாக, #காங்கிரஸ்_எதிர்ப்பு என்பதை சூழ்ச்சி கரமாக பா.ச.க.வோடு இணைத்து அறி வித்துள்ளதன் மூலம், தமிழகத்தில் #கழகக்_கூட்டணியை_வலுவிழக்கச் #செய்யும்_தந்திரத்தில்_சில_சக்திகள் #ஈடுபட்டுள்ளது_அம்பலமாகிவிட்டது.

இதற்கு ஆதாரம் தான், பேரணி பொறுப்பாளர்களில் ஒருவராக உள்ள வாலாஜா வல்லவன் என்பவரது அறிக்கை எனப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன்! இவர்களது இந்த அரசியல் நோக்கம் கொண்ட " பேரணி கொள்கையை" தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் தெரிவிக்காமல் மறைத்திருக்கிறார்கள் என உறுதியாக நம்புகிறேன்.

தமிழர்_தலைவர்_ஆசிரியர்_அவர்கள் #திராவிடர்_விடுதலைக்_கழக #தலைவர்_மணி_அண்ணன் #தந்தை_பெரியார்_திராவிடர் #கழகத்_தலைவர்_கோவை_இராம #கிருஷ்ணன்_ஆகியோரும், #திராவிடர்_இயக்கத்_தமிழர்பேரவை #தலைவர்_பேராசிரியர்_சுப_வீ #உணர்வு_பூர்வமாக_பெரியாரைஏற்றுச் #செயல்படும்_தோழர்களின் #அமைப்புகளும் ஆலோசித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுந்த விதத்திலான நோக்கத்தை முதன்மைப் படுத்தி,
"பெரியார் பேரணி-பொதுக்கூட்டம்" வெற்றி பெற்றிடச் செய்திட வேண்டுகிறேன். தோழமையுடன் தடா.ஒ.சுந்தரம் M.A.,B.L., வழக்கறிஞர், தி.மு.க சென்னை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக