வியாழன், 13 டிசம்பர், 2018

சோனியா காந்தி : 5 மாநில தேர்தல் பா.ஜவின் எதிர்மறை அரசியலையும் மீறி கிடைத்த வெற்றி

மாலைமலர் : பாரதிய ஜனதாவின் எதிர்மறை அரசியலுக்கு எதிராக காங்கிரஸ்
கட்சி வெற்றி பெற்றுள்ளது என சோனியாகாந்தி தெரிவித்துள்ளார். புதுடெல்லி: ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம், தெலுங் கானா ஆகிய 5 மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, மத்திய பிரதேசத்திலும் அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அங்கு பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சைகள் ஆதரவளிக்க முன் வந்திருப்பதால் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைப்பது உறுதியாகி உள்ளது.
இந்தி பேசும் இந்த மாநிலங்களில் பா.ஜனதாவிடம் இருந்து காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றி இருப்பது மிகப்பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.


இந்த தேர்தல் வெற்றி குறித்து சோனியாகாந்தி மகிழ்ச்சி அடைந்து உள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் கூறுகையில், ‘பா.ஜனதாவின் எதிர்மறை அரசியலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று உள்ளது. இந்த வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி. இதற்காக உழைத்த கட்சியினருக்கும் பாராட்டுக்கள்’ என்று தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக