புதன், 21 நவம்பர், 2018

பார்ப்பனிய ஆணாதிக்கத்தை நொறுக்குவோம்" . சாட்டை அடி கொடுத்த ட்விட்டர்.. SmashBrahminicalPatriarchy

Kiruba Munusamy  :  · "பார்ப்பனிய ஆணாதிக்கத்தை நொறுக்குவோம்" என்ற
வாசகம் பொறித்த அட்டையை கையில் பிடித்திருந்ததற்காக, ட்விட்டர்-இன் தலைமை நிர்வாக இயக்குனரான ஜாக் டோர்செய்-ஐ மன்னிப்புக் கேட்க வைத்திருக்கிறார்கள் பார்ப்பனர்கள். இந்திய மக்கட்தொகையில் வெறும் 5% மட்டுமே வகிக்கும் சிறும்பான்மையினரான பார்ப்பனர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் அந்த வாசகம் இருப்பதாகவும், ஒரு சர்வதேச நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருக்கும் அவர் அதனை வைத்திருப்பது உலக சிறும்பான்மையினருக்கே எதிரான ஆதிக்க போக்காக இருக்கிறதென்றும் ஒரு நாள் முழுக்க ட்வீட் செய்து மன்னிப்பு கோர செய்திருக்கிறார்கள். உலகின் ஒட்டுமொத்த மனிதத்தன்மையற்ற குரூர செய்கைகளுக்கு, ஆதிக்கத்தின்-பெண்ணடிமைத்தனத்தின் பிறப்பிடமான பார்ப்பனியத்தை எதிர்த்தால், பார்ப்பனர்கள் மன்னிப்பு கேட்க செய்வார்கள் என்றால், அதனை மீண்டும் மீண்டும் எதிர்ப்பது நம் ஒவ்வொருரின் தலையாய கடமையாகும்.< பார்ப்பனிய ஆணாதிக்கத்தை நொறுக்குவோம்! #SmashBrahminicalPatriarchy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக