புதன், 21 நவம்பர், 2018

ஓசூர் சுவாதி நந்தீஷ் ஆணவ கொலையில் இந்து முன்னணி தொடர்பு ?

ஓசூரில் ஆணவக்கொலை செய்யப்பட்ட சுவாதி- நந்தீசை கடத்தி படுகொலை
செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட வாகனம் இது. இந்த வாகனத்தின் முன்னும் பின்னும் ’இந்து முன்னணி’ கொடி பறக்கிறது. இந்துத்துவத்தின் அடையாளம் இருக்கிறது. இந்த ஆணவப்படுகொலைகளுக்கு பின்னால் இந்து முன்னணியைச் சார்ந்த கும்பல் இருக்கிறது என்று ஆரம்பத்திலிருந்து ‘விடுதலைச் சிறுத்தைகள்’ குற்றம் சுமத்தி வருகிறோம். இந்த ஆணவப் படுகொலையில் இந்து முன்னணி- சாதி வெறியர்கள்- மதவெறியர்கள் தொடர்பு இருக்கிறது என்று இப்போது அம்பலமாகி வருகிறது. இன்னமும் ஓட்டுநர்( பாமக)சுவாமிநாதன் உள்ளிட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட வில்லை. இவர்களை காப்பாற்றுவதில் தீவிரமாக இருக்கிறார் அதிமுக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி. என்ன செய்யப்போகிறது தமிழக அரசு? - வன்னி அரசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக