புதன், 21 நவம்பர், 2018

பொன் ராதாகிருஷ்ணனை தடுத்த கேரளா போலிஸ் .. பாஜக கண்டனம் .. விடியோ

Sabarimala, Pon Radhakrishnan, Bharatiya Janata, சபரிமலை, பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ., கேரள போலீஸ், பொன்.ராதா, சபரிமலை அய்யப்பன் கோயில், 144 தடை ,  அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இருமுடி, தமிழிசை, சபரிமலை அய்யப்பன் ,அய்யப்பன் கோயில்,  பாரதிய ஜனதா , 
 BJP, Kerala Police,
Pon radha, Sabarimala Ayyappan Temple, 144 bans, Minister Pon radhakrishnan, Sabarimalai Ayyappan, Ayyappan Temple, பம்பா : தினமலர் :சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்ற மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை போலீசார் தடுத்து நிறுத்தியதற்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது. தடுத்து நிறுத்தம் :
 தொடர் போராட்டங்கள் காரணமாக சபரிமலை கோயிலை சுற்றி 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது ஆதரவாளர்களுடன், நாகர்கோவிலில் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்றார். நிலக்கல் பகுதியில் இன்று காலை அவரது காரை, கேரள போலீசார் தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக பொன்.ராதா, போலீசாரிடம் கேள்வி கேட்டார்.
பிறகு பொன்.ராதாவின் காரை மட்டும் நிலக்கல்லில் இருந்து பம்பை வரை அனுமதிப்பதாகவும், அவருடன் வந்தவர்களை அனுமதிக்க முடியாது என போலீசார் மறுத்து விட்டனர். இதனால் போலீசாருக்கும், பொன்.ராதா ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஆதரவாளர்களுடன், பொன்.ராதாவையும் கேரள அரசு பஸ்சில் ஏற்றில் பம்பைக்கு அனுப்பி வைத்தனர்.
பா.ஜ., கண்டனம் : இச்சம்பவத்திற்கு தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை, மூத்த தலைவர் இல.கணேசன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழிசை கூறுகையில், புத்தியுள்ள எந்த பெண்ணும் சபரிமலைக்கு செல்ல மாட்டார். பயங்கரவாத பெண்கள் மட்டுமே சபரிமலைக்கு செல்வார்கள். மாற்று மதத்தை சேர்ந்த பெண்கள் கோயிலுக்கு செல்வதற்கு நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். ஆனால் உண்மையான பக்தர்களுக்கு கெடுபிடி விதிக்கிறார்கள். சபரிமலையில் வேண்டுமென்றே செயற்கையான பதற்றம் உருவாக்கப்படுகிறது. அங்கு நியாயமற்ற அராஜக ஆட்சி நடப்பதையே இது காட்டுகிறது. இதற்காக மன்னிப்பு கேட்ட பிஜராயி விஜயன் விரைவில் இருமுடி கட்டி அய்யப்பன் கோயிலுக்கு வருவார் என்றார். கேரள பஸ்கள் நிறுத்தம்
இதனிடையே, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை, போலீஸ் எஸ்பி அவதூறாக பேசியதாக கூறி, கன்னியாகுமரி மாவட்டம் களியாக்காவிளை பகுதியில் பா.ஜ.,வினர் கேரள அரசு பஸ்களை மறித்து போராட்டம் நடத்தினர். இதனால், கேரள அரசு பஸ்கள் தமிழக எல்லையிலேயே இஞ்சிவிளையில் நிறுத்தப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக