வெள்ளி, 9 நவம்பர், 2018

ஸ்டாலின் சந்திரபாபு நாயுடு சந்திப்பு .. கூட்டணி பேச்சுவார்த்தை


 tamil.indianexpress.com :திமுக தலைவர் முக ஸ்டாலினை, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்திக்கிறார்.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தரவில்லை என்று கூறி பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. அதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார். கடந்த வாரம் டெல்லியில் காங் கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார்.மக்களவை தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க அனைத்து எதிர்கட்சிகளும், காங்கிரஸ் தலைமையில் ஒன்றிணைய வேண்டும் என சந்திரபாபு நாயுடு வலியுறுத்தினார்.

இதனைத்தொடர்ந்து, பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார்.கடந்த வாரம் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசி கூட்டணியை உறுதி செய்தார். நேற்று மாலை மதசார்பற்ற ஜனதாதள தலைவர் தேவேகவுடாவை அவர் சந்தித்து பேசினார்.
இந்நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுவதற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று (9.11.18) சென்னை வருகிறார். இன்று மாலை 6.30 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலினின் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுவதாக தகவல் வெளியாகியது.
இதற்காக, விஜயவாடாவில் இருந்து தனி விமானத்தில் மாலை 5 மணிக்கு சந்திரபாபு நாயுடு புறப்படுகிறார். ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக