வெள்ளி, 9 நவம்பர், 2018

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் 10 நாட்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி - சத்தீஸ்கரில் ராகுல்

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் 10 நாட்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி - சத்தீஸ்கரில் ராகுல் வாக்குறுதி maalaimalar: சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக, நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஆட்சியில் உள்ள பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் கான்கெர் பகுதியில் பகன்ஜோர் நகரில் உள்ள பண்டிட் சியாம பிரசாத் முகர்ஜி மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில்  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது

மோடி அரசு பணக்காரர்களுக்காக மட்டுமே வேலை செய்கிறது. தொழிலதிபர்களின் சம்மதம் பெறாமல் மோடி எதையும் செய்வதில்லை.< பண மதிப்பிழப்பின் போது நீங்கள் அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்தீர்கள். ஆனால் கருப்பு பணம் வைத்துள்ள யாரும் வரிசையில் நிற்கவில்லை. அதே சமயம் நீரவ்மோடி , விஜய் மல்லையா, லலித் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் உங்கள் பணத்தை எடுத்துக் கொண்டு நாட்டை விட்டு ஓடி விட்டனர்.

சத்தீஸ்கரில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால், 10 நாட்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக