வெள்ளி, 9 நவம்பர், 2018

தமிழக அரசு கொடுத்த மடிக்கணினிகளை தீயில் போட்ட விஜய் ரசிகர்கள் .. ஏன் இன்னும் குண்டர் சட்டம் பாயவில்லை?

Devi Somasundaram : முந்தாநை முடிச்சுன்னு ஒரு படம்...பாக்யராஜ் எடுத்த படம் ,
1983 ல வந்துச்சுன்னு நினைக்கிறேன்.அதுல பாக்யராஜ் கிராமத்து வாத்தியார் .க்ளாஸ் ல மூணூ வால் பசங்க...அதுல தவக்களைன்னு ஒரு கேரக்ட்டர் .அவரோட டிரவுசர்க்கு ஊக்கு போட்டு விட்டு திரும்பினா பின்னாடி ஓட்டையா இருக்கும் . இதுக்கு டவுசரே போட்றுக்க வேணாம்னு பாக்யராஜ் சொல்வார்.
அன்னிக்கு கிராமபுற ஏழை மாணவர் பலர் நிலைமை கிழிஞ்ச டவுசர் தான்..பல பெண்கள் அம்மா புடவை கிழிச்சு தாவணி போட்டு பள்ளிக்கு போனார்கள்ன்னு கிராமத்தில அப்பள கச்சேரிகளில் பேச கேள்வி பட்டு இருக்கேன்..
அன்னிக்கு இலவச பள்ளி ச்சீருடை திட்டம் அந்த ஏழை மாணவர்களுக்கு வர பிரசாதம்..அது தான் கொஞ்சமாச்சும் தன் மானத்த்தோட கல்விய தேட அவர்களுக்கு தைரியம் தந்துச்சு
ஏற்கனவே சாதி ரீதியா ஏற்பட்ட தாழ்வுணர்வு இதோட
தபாலாபிசு, கிழிஞ்ச டவுசர் போன்ற சொல்லாடல்கள் அவர்கள் மனதை எத்தனை காய படுத்தி இருக்கும் .அதில் கொஞ்ச மாவது விடுதலை தந்தது பள்ளி ச்சீருடை..

அதே அப்டியே விட்றாம அவர்களின் அடுத்த நிலை கல்விக்கு இலவச பஸ் பாஸ் .கிராமத்தில் இருந்து நகரத்துக்கு உயர் கல்விகு செல்ல பஸ் பாஸ் திட்டம் ..இலவச மிதி வண்டி திட்டம் ..அவர்கள் சற்று நிமர உதவியது..
அதற்கு அடுத்து இலவச மடி கணிணி . உயர் சாதி வர்க்கத்திடம் மட்டுமே இருந்தவற்றை ஏழை வர்க்க மாணவர்களிடமும் கொண்டு சேர்த்த் தொழில் நுட்பத்தால் தான் அவர்களுக்கு சமுகம் கை வச பட்டது .
இன்று சில அறிவிலிகள் லேப்டாப்பை தீயில் போட்ட வீடியோவை பார்த்தேன்..அவை அரசின் சொத்து...அரசுடமைகளை நாசமாக்குவது சட்ட படி குற்றம்....போலிஸ் கைது செய்து கேஸ் போட்டால் குண்டர் சட்டத்தில் அவர்கள் வாழ்வாதாரமே அழிந்து விடும்..
இளம் பருவத்தினரை திரு முருகதாஸ் அண்ட் விஜய் டீம் தவறா வழி நடத்துகிறார்கள்.. தேச விரோத செயல்களில் ஈடு பட இளைஞர்களை தூண்டுவது கடுமையான குற்றம்..இதை அனைவரும் நினைவில் கொள்ளட்டும்..அல்லது விளைவுகள் விபரிதமாகும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக