திங்கள், 5 நவம்பர், 2018

இத்தனை கேம் அடித்த நானும், இந்த ஆளின் வலையில் விழுந்து போனேன் ஐய்சே ..

Image may contain: 2 peopleAjeevan Veer : நான் சொல்லவில்லையே?
நான் அவனில்லை?
113 பேரை இணைப்பது பசில் என மைத்ரி சொல்கிறார். இல்லை இல்லை 113 பேரை கொண்டு வருவதாக உறுதியளித்தது சிரிசேன என பசில் சொல்கிறார்.
முன்னால் ஜனாதிபதி ராஜபக்ச, பாராளுமன்றத்தின் பெரும்பான்மையே இல்லாமல் பிரதமரானார். அவசரமாக பிரதமராக சத்திய பிரமாணம் எடுத்த பின்னர் இதுவரை, அவர்கள் தரப்பால் போதிய 113யை சேர்க்க முடியவில்லை.
50 கோடி பணத்தையும், கெபினட் அமைச்சு பதவியையும் காட்டி, ஒரு சிலரை தூண்டில் போட்டு எடுத்துக் கொண்டாலும், மகிந்த தரப்பால் அவர்களுக்கு தேவையான 113 பேரை சேர்க்க முடியவில்லை. இந்த நிலையில் விரைவில் இந்த தொகை , 50 கோடியிலிருந்து 100 கோடி வரை ஏறலாம் என சிலர் தெரிவிக்கிறார்கள்.
அண்மையில் சத்திய பிரமாணம் செய்த பின்னர் , அமைச்சரான ஒருவர், மைத்ரியிடம் ' எங்க சேர் வருவதாக சொன்ன 113 பேர்? இன்னும் இல்லையே? ' என்று கேட்ட போது கோபமடைந்த மைத்ரி ' நான் ஒருத்தருக்கும் பெரும்பான்மையை காட்ட ஆள் சேர்த்து தருவதாக சொல்லவில்லை. எனக்கு இருந்த பலத்தை வைத்து மகிந்தவை பிரதமராக்கினேன். அவருக்கு இருக்கும் செல்வாக்கை வைத்து அவர் தேடிக் கொள்ளட்டும் ' என்றுள்ளார்.
பின்னர் ' நான் பெரும்பான்மையை தேடித் தருவதாக சொல்லவே இல்லை. பசில்தான் சொன்னார் அவர்களால் பெரும்பான்மையை தேடிக் கொள்ள முடியும் என்று......' என மைத்ரி பொரிந்து தள்ளியிருக்கிறார்.

அதே அமைச்சர், பசிலை சந்தித்த போது ' எங்கே சேர் ஜனாதிபதிக்கு உத்தரவாதம் கொடுத்த 113 பேரும் ' என்று வினவியுள்ளார். அந்த கேள்வியை கேட்டதும் கொதித்துப் போன பசில் ' பைத்தியமா? 113 பேர் எங்களிடம் இருந்தால் பார்த்துக் கொண்டிருப்போமா? அப்படி இருந்திருந்தால் ரணிலுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானித்தில் வென்றிருப்போமே? இத்தனை டீல் செய்த, இத்தனை கேம் அடித்த நானும், இந்த ஆளின் வலையில் விழுந்து போனேன் ஐய்சே ....' என்றுள்ளார்.
நிலமை இப்படி இருக்க , இந்த ஆட்சி புரட்சிக்கான உண்மையான காரணம் என்ன?
மகிந்த தரப்பும், மைத்ரி தரப்பும் இணைந்து, ரணில் மக்கள் விரோத செயலில் ஈடுபடுகிறார் என்றே சட்டத்துக்கு புறம்பான ஒரு அரசை அமைத்தார்கள். ஆனால் முக்கியமான உண்மையான தேவை, நல்லாட்சி கொண்டு வந்த புதிய விசேட நீதிமன்ற வழக்குகளை பலவீனப்படுத்த வேண்டும் எனும் நோக்கத்துக்காகத்தான்.
விசேட நீதிமன்றம் மூலம் மகிந்த காலத்தில் நடந்த வழக்குகளை விசாரித்து வேகமாக தீர்ப்புகளை அளிப்பதே குறியாக இருந்தது. அங்கே உள்ள அனைத்து வழக்குகளிலும் , ராஜபக்ச குடும்பத்தில் ஒருவராவது இல்லாத வழக்கே இல்லை. இது ஒரு வருடம் இழு பட்டால் ராஜபக்ச குடும்பத்தில் மட்டுமல்ல அவர்களோடு இருப்போரில் பலர் கம்பி எண்ண வேண்டி வரும். இந்த வழக்குகளில் இருந்து மீள்வதற்கு அரசியல் மாற்றம் ஒன்றைக் கொண்டு வர 50 அல்ல 100 கோடி கொட்டியாவது வழக்குகளில் இருந்து மீள்வதே குறியாக இருந்தது. ஆனால் போகும் போக்கில் என்ன நடக்குமோ தெரியாது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக