ஞாயிறு, 4 நவம்பர், 2018

பிஜேபியை ஜெயிக்க வைக்க பெரும் முயற்சி எடுப்பவர்.. உவைசி .. Asaduddin Owaisi

Mansoor Mohammed :  Indeed, we have to save the country. I am saying that we have to save it from Modi, Naidu and Congress," Owaisi said..
(All India Majlis-e Ittihad al-Muslimin)
"உண்மையில் நாட்டை காப்பாற்ற வேண்டும், மோடி,
நாயுடு மற்றும் காங்கிரஸில் இருந்து அதை காப்பாற்ற வேண்டும் என்று நான் சொல்கிறேன்," என்று உவைசி கூறினார்..) ..
பிஜேபியை ஜெயிக்க வைக்க பெரும் முயற்சி எடுப்பவர்.. உவைசி கடந்த சட்டமன்ற தேர்தலில்
உ.பி.யில் இருபதுக்கு மேற்பட்ட இடத்தில் ஓட்டை பிரித்து பாஜக வெற்றிக்கு வழி வகுத்தவர் ..கர்நாடகாவிலும் 14 இடங்களில் காங்கிரஸ் வெற்றியை தடுத்தவர் .. வடமாநிலங்களில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இவரின் கட்சி போட்டியிடும் .. அங்கெல்லாம் பாஜக வெற்றியை எளிதாக பெறும் .. உ.பியில் 21 இடத்தில் இருபதாயிரம் வரை வாக்குகளை பெற்றது இவரது கட்சி அங்கெல்லாம் பாஜக 10 முதல் 15 ஆயிரத்திற்கு குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது கர்நாடகாவில் இவரது கட்சி வாக்கை பிரிக்க சொற்ப எண்ணிக்கையில் முவாயிரம் நாலாயிரம் என வித்தியாசத்தில் பாஜக வெற்றிப்பெற்றது ..இவரது நோக்கம் இஸ்லாமியர்களுக்கு அவர்களின் மேம்பாட்டிற்காக உழைப்பதாக இல்லை மாறாக வாக்குகளை சிதறவைக்கிற செயலாகவே இருக்கிறது ..


..
ஆரிய சூழ்ச்சி அறியாமல் இஸ்லாமிய இயக்கங்கள் தொடர்ந்து சமூகநீதி பேசுகிற கட்சிகளை தோற்கடிக்க பெரும்பாடுபடுகின்றன எங்களுக்கான அங்கீகாரத்தை தரவில்லை என்ற குற்றசாட்டை முன்வைத்து திமுக உள்ளிட்ட பிற மாநில கட்சிகளை வீழ்த்த நினைக்கிறார்கள் உரிமைகள் மறுக்கபடுவதாக கூறும் குற்றசாட்டில் நியாயம் உண்டென்றாலும் அதற்கான காலம் கனியும் போது தரபட்டிருக்கிறதென்பதையும் இந்திய சமூகத்தில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு உட்பட பல விடயங்களில் குரல் கொடுத்திருக்கிறார்கள் .. சில வேண்டதகாத செயல்களை இளைஞர்களை கொண்டு நடத்தி வழக்கு சிறையென்று வந்த பிறகு கைகழுவிய நிலையில் இஸ்லாமிய இயக்கங்கள் நழுவிவிட.. குற்றசாட்டை மாநில கட்சிகளிடத்தில் குறிப்பாக பெரிய கட்சிகளின் துரோகமென நகர்ந்து கொள்கிறார்கள் ஒற்றுமையோடு சந்திக்க வேண்டிய விடயங்களில் கூட தனித்தனி ஆவர்த்தனம் செய்து அதை நீர்த்துப்போக செய்வதில் முன்னணி இயக்கங்கள் பெரும்பங்காற்றுகிறது ..
..
யார் எதிரி என்பதையோ எப்படி வீழ்த்தவேண்டுமென்பதிலோ அக்கறையின்றி சுயநலத்தோடு செயல்படுவதால் பலன் பாசிசத்திற்கென்ற உண்மையை விளங்காமல் இருக்கிறார்கள்.. இதில் இஸ்லாமிய இயக்கங்கள் முன்னிலை வகிக்கின்றன.. உவைசி ஆர்எஸ்எஸ் சிலீப்பர் செல் போலதான் செயல்படுகிறார் தமிழகத்தில் பிஜே செயல்பட்டதைப்போல.. எங்கே எப்போது எந்த ஆயுதத்தை எடுக்கவேண்டுமென தெரிந்தவன் மட்டுமல்ல எப்போது எடுக்க கூடாதென அறிந்தவன் தான் சிறந்த போராளி ..
மக்கள் கடமையாற்ற தகுதியானவன் ..
..
முட்டாள்கள் இருக்கும் வரை பாசிசம் துள்ளதான் செய்யும் .. மதம் பேசினாலே மதியிழந்துதான் போவர் .. ஒற்றுமையெனும் கயிறை இங்கே தன் சமுதாயத்தின் கழுத்தில் இட்டு இறுக்குகிறார்கள் நவீன சமுதாய பிணிகள்.. இன்றைய காலத்தின் கட்டாயத்தை உணராத பேச்சாகவே உவைசியின் பேச்சு அமைந்திருக்கிறது ..
..
ஆலஞ்சியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக