திங்கள், 5 நவம்பர், 2018

ஏ.ஆர்.ரஹ்மான் : நிறைய துயரம்.. 25 வயது வரை தற்கொலை எண்ணங்கள் எனக்கு இருந்தது

tamil.thehindu.com -பிடிஐ : நாடு ஏ.ஆர்.ரஹ்மான் என்ற இசைக்கலைஞரின் திறமையைக் கண்டுணர்வதற்கு முன்பாக அவரது வாழ்க்கையில் ஒரு கட்டம் தோல்விகளும், கடினப்பாடுகளும் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் தற்கொலை எண்ணங்களை உருவாக்கியதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார்.
ஆஸ்கார் வென்ற இந்திய இசைக்கலைஞன் ஏ.ஆர்.ரஹ்மான் அந்த கடினமான காலங்கள் பிற்காலத்தில் தனக்கு பயமற்ற ஒரு மனநிலையை உருவாக்கியதாகவும் தெரிவித்தார். எதைக் கண்டும் எதற்குப் பயப்பட வேண்டும்?
என்னுடைய 25 வயது வரை தற்கொலைக்கான எண்ணங்கள் என்னிடம் ஆட்சி செலுத்தின. என் தந்தையை இழந்திருந்தேன், இது பெரிய வெறுமையைத் தோற்றுவித்தது. இன்னும் எத்தனை எத்தனையோ விஷயங்கள்…
ஆனால் அந்த மனநிலை ஒருவிதத்தில் என்ன அச்சமற்றவனாக மாற்றியது என்றே கூற வேண்டும். மரணம் என்பது அனைவருக்கும் நிரந்தரமானது. படைக்கப்பட்ட அனைத்துக்கும் மரண தேதி ஏற்கெனவே குறிக்கப்பட்டுவிட்டது. ஆகவே எதற்காக எதைப்பற்றியும் அஞ்ச வேண்டும்” என்றார்.

51 வயதாகும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாழ்க்கையில் திருப்பு முனை ஏற்படுத்தியது பஞ்சதன் ரெக்கார்ட் இன் என்ற ரெக்கார்டிங் தியேட்டரை அவர் கட்டிய பிறகுதான்.
“அதற்கு முன்னர் விஷயம் செயலற்றுதான் இருந்தது. அப்படிப்பட்ட உணர்வுதான் அப்போது இருந்தது. ஏனெனில் என் தந்தையின் மரணம், அவர் பணியாற்றிய வழி, என்னால் அதிகப் படங்கள் பண்ண முடியவில்லை, 35 படங்கள் இருந்தன. நன் 2 ற்குத்தான் இசையமைத்தேன்.
அனைவரும் நான் எப்படி இந்தத் துறையில் பிழைக்கப் போகிறேன் என்று ஆச்சரியப்பட்டனர். உன்னிடம் அனைத்தும் உள்ளது, பற்றிக் கொள் என்று கூறினர். அப்போது எனக்கு 25 வயது, ஆனால் என்னால் செயல்படமுடியவில்லை. அனைத்தையும் சாப்பிடுவது போன்றது அது, நாம் உணர்வற்று போவோம் அல்லவா. ஆகவே கொஞ்சமாக சாப்பிட்டாலும் நிறைவாக இருக்க வேண்டும்” என்றார்.
“Notes of a Dream: The Authorized Biography of AR Rahman” என்ற நூலை எழுதியவர் கிருஷ்ணா திரிலோக், இந்தப் புத்தகம் மும்பையில் நேற்று வெளியிடப்பட்டது, இதில் இன்னும் தன் வாழ்க்கையின் எதிர்மறைப்பகுதிகளை ஏ.ஆர்.ரஹ்மான் வெளிப்படுத்தியுள்ளார்.
ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகர் இறக்கும் போது ரஹ்மானின் வயது 9. ஆர்.கே.சேகரும் திரைஇசையமைப்பாளர்தான். இவர் மறைவுக்குப் பிறகு அவரது இசைச் சாதனங்களை வாடகைக்கு விட்டுத்தான் ஜீவனாம்சம் செய்ய வேண்டிய நிலை, இதனால் மிகவும் இளம் வயதிலேயே ரஹ்மான் இசையில் அடியெடுத்து வைத்தார்.
“நான் அனைத்தையும் எனது 12-22 வயதில் முடித்திருந்தேன். எனக்கு அன்றாடம் செய்யும் சாதாரண விஷயங்கள் பிடிக்கவில்லை. நான் அதனைச் செய்ய விரும்பவில்லை.
என்னுடைய சொந்தப் பெயர் பிடிக்கவில்லை:
மணிரத்னத்தின் ரோஜா படத்துக்கு இசையமைக்கும் முன்பாக ரஹ்மான் தன் குடும்பத்துடன் சூஃபி இஸ்லாமுக்கு மாறினர். இவரது இயற்பெயர் திலிப் குமார் என்ற பெயரே அவருக்குப் பிடிக்காமல் போனது.
“எனக்கு என் அசல் பெயரான திலிப் குமார் என்ற பெயர் பிடிக்கவில்லை. ஏன் அந்தப் பெயரை வெறுத்தேன் என்றும் எனக்குத் தெரியவில்லை. என் ஆளுமைக்கு அந்தப் பெயர் சரிப்பட்டு வரவில்லை என்பதை உணர்ந்தேன். நான் வேறொருவனாக மாற ஆசைப்பட்டேன், அந்தப் பெயர் என் முழு இருப்பையும் விளக்குவதாக அமைய வேண்டும் என்று நினைத்தேன். கடந்தகாலச் சுமைகளை இறக்கி விட்டு வர விரும்பினேன். பெயர் உட்பட.
நீங்கள் யார் என்பதை தோன்றச் செய்து அதனை வெளியே விட வேண்டும். ஆகவே உங்கள் மன ஓவியப் புத்தகத்தில் நீங்கல் கருத்துச் சித்திரம் வரையும் போது உங்களைப் பற்றி நிறைய சுயபரிசீலனைகள் தேவை. உங்களில் நீங்கள் ஆழமாக இறங்கிச் செல்ல வேண்டிய தேவை உள்ளது. உங்கள் அகத்தின் குரலை நீங்கள் கேட்க வேண்டும், அது கடினமானது. ஒருமுறை இதைச் செய்துவிட்டால் நாம் தொலைந்து போய் நம்மையே மறந்து விடுவோம்.
நான் என்னுள் ஆழமாக இறங்கும் போது கதவு தட்டப்படும் சத்தம் கேட்கும், நான் எதார்த்தத்துக்கு திரும்புவேன், ஆனால் நான் மீண்டும் என்னுள் ஆழமாகச் செல்ல முடியாமல் போகும். அதனால்தான் நான் அதிகாலை 5 அல்லது 6 மணி அல்லது நள்ளிரவுகளில் பணியாற்றுகிறேன்.
செய்ததையே செய்து கொண்டிருந்தால் சோர்வே ஏற்படும். பல்வேறு விஷயங்களை நாம் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும். என்னைப் பொறுத்தவரை பயணம் செய்வது, அதிக நேரம் செலவழிக்க முடியாவிட்டாலும் என் குடும்பத்துடன் நேரத்தைச் செலவழிப்பது அழகானது, எனக்கு அது மிகவும் உதவுகிறது” என்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.\

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக