சனி, 3 நவம்பர், 2018

இலங்கையில் அடுத்த ஆண்டு உலக இந்து மாநாடு

இலங்கையில் அடுத்த ஆண்டு உலக இந்து மாநாடுமாலைமலர் :இலங்கையில் அடுத்த ஆண்டு மே மாதம் உலக இந்து மாநாடு நடைபெறும் என அந்நாட்டின் இந்து அறநிலையத்துறை மந்திரி டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கொழும்பு: இலங்கை வடக்கு மாகாண அபிவிருத்தி துறை மற்றும் இந்து அறநிலையத்துறை மந்திரி டக்ளஸ் தேவானந்தா இந்து சமயம் மற்றும் கலாச்சார விவகாரங்கள் தொடர்பாக அத்துறைசார்ந்த உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பழுதடைந்துள்ள இந்து கோவில்கள் மற்றும் அவற்றின் சார்பில் நடத்தப்படும் பள்ளிக்கூடங்களை புனரமைப்பதற்கான பட்டியலை சமர்ப்பிக்குமாறு இந்த ஆலோசனை கூட்டத்தின்போது அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார்

இந்த ஆலோசனையின்போது இலங்கையில் அடுத்த ஆண்டு மே மாதம் உலக இந்து மாநாடு நடத்த தீர்மானிக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Srilankahost #WorldHinduCongress

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக