சனி, 3 நவம்பர், 2018

அயோத்தியில் 151 மீ பிரம்மாண்ட ராமர் சிலை: யோகி ஆதித்நாத்

அயோத்தியில்  151 மீ பிரம்மாண்ட ராமர் சிலை: யோகி ஆதித்நாத்
தினமலர் : லக்னோ: உ.பி. மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் சிலை அமைக்க அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவு செய்துள்ளதாக தகவல்வெளியாகியுள்ளன.
இது குறித்து உ.பி. தகவல் துறை கூடுதல் தலைமை செயலாளர் கூறுகையில் உ.பி. மாநிலம் அயோத்தியில் சராயு நதிக்கரையில் 151 மீ உயரத்தில் பிரம்மாண்ட ராமர் சிலை அமைக்க முதல்வர் முடிவுசெய்துள்ளார். அதற்கான அறிவி்ப்பை வரும் 6-ம் தேதி வெளியிடுகிறார். இதற்கான திட்ட மதிப்பு குறித்து சுற்றுலா மற்றும கலாச்சாரத்துறை அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இந்த சிலை அமைக்கப்பட்டால் அது சுற்றுலாத்துறையை ஈர்க்கும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக