ஞாயிறு, 4 நவம்பர், 2018

தமன்னா .. 10 படங்கள்! அடடா மழைடா அடைமழைடா .. காணமல் போனவர் மார்க்கெட் எகிறிய மர்மம்

மாலைமலர் :ஸ்கெட்ச் படத்திற்குப்
பிறகு எந்தப் படமும் வெளியாகாமல்
இருந்த தமன்னாவின் கைவசம் தற்போது பல
படங்கள் இருக்கிறது. ஜனவரி மாதம் வெளியான ஸ்கெட்ச் திரைப்படத்துக்குப் பின் தமன்னா நடிப்பில் வேறெந்த படமும் வெளியாகவில்லை.
ஆனால், அவர் கைவசம் தற்போது சுமார் பத்து படங்கள் வரை உள்ளன. கத்திச் சண்டை படத்திற்குப் பின் விஷால், தமன்னா இணைந்து நடிக்கும் படத்தை சுந்தர்.சி இயக்க உள்ளார்.
ஏற்கெனவே சுந்தர்.சி இயக்கத்தில் ஆம்பள படத்தில் விஷால் கதாநாயகனாக நடித்திருந்தார். இதே கூட்டணியில் மதகஜராஜா திரைப்படம் உருவாகி வெளியாகாமல் உள்ளது. இந்த நிலையில் மூன்றாவது முறையாக அவரது இயக்கத்தில் நடிக்கஉள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.ரவீந்திரன் இதைத் தயாரிக்கிறார்.

 சீனு ராமசாமி இயக்கத்தில் தமன்னா கண்ணே கலைமானே படத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக தேவி 2 படமும் உருவாகி வருகிறது. தெலுங்கில் குயின் படத்தின் ரீமேக்கான தட் இஸ் மகாலட்சுமி உட்பட 10 படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். இதனால் அடுத்த ஆண்டு தமன்னா நடிப்பில் பல படங்களை எதிர்பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக