ஞாயிறு, 18 நவம்பர், 2018

மகிந்தா : ரணில்! இவ்வளவு காலமும் என்னோடு இருந்து எனக்கே?.. உனக்கும் ஒருநாள்?. கவனமாக இரு! ..2015 சனவரி 9ம் திகதி காலை Flashback

Ajeevan Veer : எனக்கு விட்டவன் - உனக்கும் விடுவான்
கடைசியில் நாட்டை விட்டே ஓடுவானா?
ஊரில் உள்ள அப்பாவிகள் கட்சிக்காக அநியாயமாக அடிபடுவார்கள். சாவார்கள். அதைவிட இவனுகள் பாரளுமன்றத்தில் அடிபட்டு கை கால் முறிவது பரவாயில்லை. இவனுகளுக்காக அநியாயமாக சாவார்கள். அப்பாவிகளை விட்டு விடுங்கள். இவனுகளையே சாக விட்டு விட வேணும். அதுதான் நம் எல்லோருக்கும் நல்லது.
இத்தனை கோலமும் எதுக்கு?
மகிந்த ஐயா ! 113யைக் காட்டினால் இந்தப் பிரச்சனை இல்லையே?
113யை காட்ட முடியாத மகிந்த இந்த பைத்தியங்களைக் கொண்டு வந்து இப்படிக் கூத்தாட வேண்டியதில்லைதானே?
நாங்க சட்ட வல்லுனர்கள் இல்லை.
113யை காட்டேனப்பா?
இந்த அடிபாடும் இருக்காது. சாகடித்துக் கொள்ளவும் தேவையில்லை.
நாடு அவலத்தை நோக்கி போகவும் தேவையில்லை. அதைச் செய்யாமல் ஏன் இந்த கூத்தை ஆடுறாய்?
இதெல்லாம் ஏன் நடக்கிறது?
இந்தக் கூத்தை எதிர்வரும் நீதிமன்ற தீர்ப்பு வரும் 7ம் திகதி வரை இழுத்துக் கொண்டு போக வேண்டும்.
இந்த சண்டை தொடர வேண்டும்.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணை சட்ட புத்தகத்தில் இடம் பெற்றால் பிரச்சனை ஆகிவிடும்.
அதனால் அதை இழுத்தடிக்க வேண்டும். அதற்கு ஒரு காலம் எடுக்கும். அதை செய்ய விடக் கூடாது.
அந்த தீர்மானம் நிறைவேறி பதியப்பட்டு விடக் கூடாது.
இந்த தீர்ப்பு வருவதற்கு முன் நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறினால் மகிந்தவின் அரசியல் வாழ்வுக்கு சாவு மணிதான். அதன் பிறகு எந்தவொரு கட்சி பெயரிலும் மகிந்தவுக்கு பிரதமராக முடியவே முடியாது.
ஏன் இதை 7ம் திகதி வரை இழுத்துக் கொண்டு போகிறார்கள் தெரியுமா?

இது பொது மக்கள் அறிந்திருக்க வேண்டிய முக்கியமான ஒன்று.
மைத்ரி , சிரால் லக்திலக்கவை (ஆலோசகர்) தூக்கி எறிந்து விட்டார்.
மைத்ரி குணரத்ணவையும் (ஆலோசகர்) தூக்கி எறிந்துவிட்டார்.
இப்போது தனது வேலையை சுப்பர் ஆளொன்றிடம் ஒப்படைத்தார்.
யார் மேன் தெரியுமா? சரத் கோன்கஹகே!
இவரும் வழக்கறிஞர்.
இவரோடு சில வழக்கறிஞர்களுக்கு ஒரு டீலை மைத்ரி கையளித்தார்.
அட்டர்னி ஜெனரலையும் மற்றும் சீஜேயையும் டீல் பண்ணும் பொறுப்பை மைத்ரி கொடுத்தார்.
தனக்கு சாதகமான தீர்ப்பு ஒன்றை பெறவே இவர்களிடம் மைத்ரி டீலை ஒப்படைத்தார்.
இதைக் கேள்விப்பட்ட மைத்ரி குணரத்ன கடும் சினத்தோடு திரிகிறார்.
சிராலுக்கும் தெரியாமல் இவர் ஏன் இப்படி செய்தார் என உட்பூசல் ஒன்று அங்கே பூகம்பமாக உருவாகியுள்ளது.
இப்படி பெரிய டீல் போட்டு வெல்லக் கூடிய ஆள் இல்லை மைத்ரி.
அப்படி இவர் திறமையானவர் இல்லை.
அந்த விதத்தில் மகிந்த - ரணில் சுப்பர் டீல் கிங்கள்.
மைத்ரி டீல் போட்ட அடுத்த நிமிடமே வீதியில் போறவனுக்கே அவர் போட்ட டீல் தெரிந்துவிடும்.
இந்த நீதிமன்ற டீல் லேசுப்பட்டதில்லை. ஏன்?
முழு உலகமே வரப்போகும் தீர்ப்பை பார்த்துக் கொண்டிருக்கிறது.
இலங்கை நீதிமன்றத்தின் சுயாதீனம் குறித்த கேள்வியை காண உலகம் வைத்த கண் வாங்காமல் நிற்கிறது.
முறைச்சு பார்த்தாலும் டொலர் ஏறும்? காரணம்?
எமது நாடு சுய நிறைவடைந்த ஒரு நாடல்ல. ஏழை எழிமையான நாடு. அதை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும். பிச்சை பாத்திரம் ஏந்தி பிச்சை எடுக்கும் ஒரு இனம் எமது நாடு. இதுவே உண்மை! இந்த அரசியல் நாதாரிகள்தான் இந்த நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளார்கள். சர்வதேசத்தோடு பெரிய கதை பேசி கேம் கேட்டு அவர்களை வெல்ல முடியாது.
கட்டார் போன்ற நாடுகளால் முடியும். அது ஒன்று ரெண்டு நாளில் தடை போட்டாலும் நிமிர்ந்து நின்றுவிடும். அந்தளவு செல்வம் கொழிக்கும் நாடு அது. நாட்டுக்குள் மட்டுமல்ல வெளியிலும் பலமானது அந்த நாடு. நம் நாட்டில் அப்படி ஒரு கூந்தலும் இல்லை. அதனால் நீதிமன்ற தீர்ப்பை முழு உலகமும் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதை கவனத்தில் வைத்திருங்கள்.
இதற்குள் இதையும் தெரிந்து கொள்ளுங்கள். ரணிலை சுற்றி ஒரு டீம் உள்ளது. அது றோயல் என்றாலும் றோயலுக்கு வெளி என்றாலும் பிரச்சனைகளை பேசி ஆலோசனை செய்ய ஒரு பலமான டீம் உள்ளது. அவர்களுக்குள் பேசி - ஆலோசனை பெற்று ஒரு திடமான முடிவுக்கு வர முடியும். இதேபோல ஒரு டீம் மகிந்தவுக்கு உள்ளது.
ஆனால் அப்படி ஒரு டீம் மைத்ரிக்கு இல்லை. அந்தத் தகுதியும் மைத்ரிக்கு இல்லை. அப்படியான ஆட்களும் மைத்ரியோடு இல்லை. அதனால்தான் சாப்பிட்ட பொருட்களைக் கூட மைத்ரி இப்போது போட்டுடைக்கிறார் . மனம் பேதலித்து போன நேரத்தில் மனம் விட்டுப் பேச மைத்ரிக்கு ஒரே ஒருத்தர்(தி)தான் இருக்கிறார். அவரோடு பேசும் இடத்துக்கு குடும்பத்தவர்கள் போவதில்லை. அது ஒரு வேறு கதை. மைத்ரியின் குடும்பத்தில் எவரும் அதிபர் மாளிகைக்கு வருவதை மைத்ரி விரும்புவதில்லை. வருவதுமில்லை. அது இன்னொரு தனிப்பட்ட பிரச்சனை. அது எமக்கு தேவையே இல்லை.
அதை விடுவோம். மைத்ரிக்கு ரணிலோடு இருப்பது தனிப்பட்ட ஒரு குரோதம். அரியஸ் ஒன்று. இது எம்மை பற்றியோ அல்லது நாட்டு மக்கள் குறித்தோ உள்ள கரிசனை அல்ல. ரணிலுக்கு எதிராக அடித்த அடித்த ஒவ்வொரு துருப்பு சீட்டும் வெட்டுப்பட்டது. அதனால் ரணில் மேல் வைராக்கியத்தோடுதான் மைத்ரி ஒவ்வோரு நிமிடத்தையும் கடக்கிறார்.
மகிந்த பிரதமர் பதவியை எடுத்த பின்னர் மகிந்தவே இதைவிட்டு விலகி ராஜினாமா செய்து விடுகிறேன் என்றார்.
இல்லை! நான் அதை எப்படியும் செய்து தருகிறேன் என இழுத்து மகிந்தவை உட்கார வைத்தார்.
இதனால்தான் இந்த பிரச்சனை கடுமையாக காரணமாகிவிட்டது.
நாங்கள் இதை உணர வேண்டும். நாங்கள் ஏழ்மையான ஒரு காட்டுவாசி மக்கள் குழுமம். இந்த பிரச்சனையால் நமது எதிர்கால சந்ததிக்கு ஒரு நல்லதும் ஆகப் போவதில்லை. எப்படியானாலும் மைத்ரி என்ற மனிதன் ஒரு செப்பு காசுக்கும் நம்ப முடியாத ஒரு ஆள். அதற்கும் ஒரு காரணம் உள்ளது. கொழும்பு அரசியல் சமூகத்தில் இது ஒரு இரகசியம்தான். அதையும் சொல்ல வேண்டிய வேளை இது.
அதாவது 2015 சனவரி 9ம் திகதி காலையில் அலரி மாளிகையை விட்டு மகிந்த வெளியேறி காரில் ஏறும் போது ரணிலின் முதுகில் கையை வைத்து தடவி . " ரணில்! இவ்வளவு காலமும் என்னோடு இருந்து எனக்கே விட்டவன். உனக்கும் ஒருநாள் விடுவான். கவனமாக இரு" என்று சொல்லி விட்டே சென்றார்.
அதுதான் இப்போது நம்முன் நடந்து கொண்டிருக்கிறது.
அதனால்தான் மைத்ரி என்பவனை செம்பு காசுக்கு கூட நம்ப முடியாதவன் என்று சொல்கிறோம்.
இதுவும் எமது மனதில் படும் விடயம்.
இது கடைசி முடிவாகலாம். இப்படியும் நடக்கலாம்.
அதாவது மைத்ரி அனைத்தையும் வீசி விட்டு நீங்கள் குத்து வெட்டுப்பட்டு செத்து தொலைந்தாலும் பரவாயில்லை.
நான் எங்காவது போகிறேன் என நாட்டை விட்டு வெளியேறலாம்.
வெளிநாடொன்றுக்கு போகலாம்.
அதற்கான காரணம் ஒன்றையும் சொல்ல வேண்டியுள்ளது.
இப்போதைக்கே மைத்ரியின் மருமகன் திலினவுக்கு உரிமையாக கொஸ்வத்தை பகுதியிலிருந்த பெரும் சொத்தொன்றை பெரியதொரு வியாபாரிக்கு விற்று விட்டார். அதோடு அவர்களுக்கான கொழும்பு சொத்துகளை விற்று தருமாறு புரோக்கர்களுக்கு கொடுத்து விட்டார்கள். அதனால் குடும்பத்தோடு மைத்ரிபால நாடு விட்டு ஓடலாம் எனும் சந்தேகம் எமக்கு வருகிறது.
நாங்கள் ஒரு ஆலோசனையை சொல்கிறோம். உலகின் நல்ல நாடுகளுக்கு போக வேண்டாம். உம்மை எவரும் மதிக்க மாட்டார்கள். ஒரு நாட்டின் மோசமான ஜனாதிபதியான உம்மை - அதாவது உனக்கே தகுதியில்லா ஜனாதிபதி பதவியொன்று இருந்தது.
அப்படி எங்காவது போனால் போடா கச்ச தீவுக்கு!
- Dharshana Handhungoda (சிங்களம்)
தமிழாக்கம் : AJeeavn

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக