ஞாயிறு, 18 நவம்பர், 2018

2004ம் ஆண்டு பின் வாங்கிய ரணில் 2018ம் ஆண்டு பின் வாங்காத ரணில்

Ajeevan Veer : புலிகளுடன் அமைதி பேச்சு வார்த்தை மேற்கொண்டிருந்த பிரதமர்
ரணில், நோர்வேயூடாக பிரபா - ரணில் ஒப்பந்தத்தை திடீரென கையெழுத்திட்டு அமுல்படுத்தினார். கடைசிவரை மிக நெருங்கியோரைத் தவிர யாருக்கும் அது தெரியாமலிருந்தது.
சந்திரிகா ஜனாதிபதியாக இருந்தார். அவருக்குக் கூட அது தெரிந்திருக்கவில்லை. அச்சமயத்தில் ஜேவீபியினர் சந்திரிகா அரசோடு இணைந்திருந்தனர். அப்போதைய ஜேவீபீ தலைவர் சோமவங்ச இருந்தார் என நினைவு. அவர்களது அழுத்தம் சந்திரிகாவுக்கு பெரும் தலையிடியானது. அவர்கள் ரணிலை அகற்ற அழுத்தம் கொடுத்தனர்.
ரணிலின் ஆட்சியை சந்திரிகா கலைக்கும் போது ரணில் வெளிநாட்டில் இருந்தார். அந்த அறிவிப்பு வந்த பின்னர் இலங்கை திரும்பினார். விமான நிலையம் ஐதேக ஆதரவாளர்களால் நிரம்பி வழிந்தது. ஜனாதிபதி சந்திரிகாவுக்கு எதிரான கோசங்கள் வானைப் பிளந்தன.

ரணிலுடன் நெருக்கமாக இருந்தவர்கள் ரணில் இந்த ஜன சக்தியை பாவித்து பெரியதொரு பேரணியாக கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட உத்தரவிடுவார் என நம்பினார்கள். ஆனால் விமான நிலையத்தில் வந்திறங்கிய ரணில் , எல்லோருக்கும் நன்றி தெரிவித்து விட்டு அமைதியாக வீடு திரும்புமாறு ஆதரவாளர்களுக்கு சொன்னார். எல்லோருக்கும் வெறுத்து விட்டது. அனைவரும் அமைதியாக வீடு திரும்பினர்.
எனவே ரணில் தலைமையிலான ஆட்சியை 2004ம் ஆண்டு சந்திரிகா கலைத்தார். அப்போது இருந்த அரசியலமைப்பின் பிரகாரம் மாற்று வழிகளோடு ஆட்சியை தக்க வைக்கலாம் என ரணிலிடம் பலர் பேசிப் பார்த்தனர். ஆனால் ரணிலோஅரசியல் சாசனத்தில் ஜனாதிபதியால் ஆட்சியை கலைக்க அதிகாரம் உள்ளது. எனவே விலகி விட வேண்டும் என எதிர்ப்பே இல்லாது விலகிச் செல்ல வேண்டும் என்றார்.
ரணில் வீட்டில் , முக்கியமான வீஐபீக்கள் மற்றும் தொழிலதிபர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை பணம் கொடுத்து வாங்கி எமது பலத்தை காட்டி , ஆட்சியை நீடிக்கலாம் என ஆலோசனை சொன்னார்கள்.
"என்ன பேச்சு பேசுகிறீர்கள். மக்களின் வாக்களால் தேர்வான பாராளுமன்ற உறுப்பினர்களை காசு கொடுத்து வாங்குவதா? அது தேவையில்லாத வேலை. சட்டப்படி நான் விலக வேண்டும். உங்கள் வேலையை பார்த்துக் கொண்டு போங்க" எனச் சொன்ன ரணில் விலகிக் கொண்டார். பின்னர் சந்திரிகா ரணிலது அரசைக் கவிழ்த்தது பெரும் தவறு என வேதனைப்பட்டார்.
அன்று ரணில் மேல் பலர் எரிந்து விழுந்தார்கள். அதிலிருந்து ரணில் போர்க் குணம் மிக்கவரல்ல என பலர் நினைத்தார்கள். போர்க் குணம் என்பது ஒன்று. அரசியல் என்பது இன்னொன்று என ரணில் பல இடங்களில் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதனால்தான் தான் வெற்றி பெற முடியாத இடங்களில் பலரை பொது அபேட்சர்களாக நிறுத்தும் போது ஆதரவு வழங்கினார்.
2015 ஆட்சியை கையிலெடுக்க ஆரம்பிக்கும் போதே இலங்கை தேசிய இனப் பிரச்சனைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதை இலங்கை முழுவதும் ரணில் பிரசாரம் செய்து வந்தார். இலங்கையின் மிக முக்கிய பிரச்சனை தேசிய இனப் பிரச்சனை. அதற்கு தீர்வொன்று காணாது நாட்டை முன் நகர்த்த முடியாது என சொல்லி வந்தார். அதனடிப்படையில் இரு கட்சிகள் ஒன்றாக இருந்தால் அதை பிரச்சனையில்லாமல் தீர்க்க முடியும் என நம்பினார். யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக ஜேவீபீயும் தேசிய இனப் பிரச்சனையை தீர்க்க வேண்டும் எனும் நிலைப்பாட்டை எடுத்தது. அதற்கு காரணம் இளம் ஜேவீபீ தலைமைதான். ஆனால் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இழுத்தடிப்புகளை ஆரம்பித்தது. அரசியல் சாசனத்தை கொண்டு வர விடாது தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டது. என்னைப் பொறுத்தவரை இன்னும் சில காலம்தான் சிரிசேன ஜனாதிபதியாக இருக்க முடியும். அதன்பின் அனைவரோடும் புதிய அரசியல் சாசனத்தை கொண்டு வந்து விடலாம். அதன்பின் என் அரசியலை விட்டுச் சென்றுவிட வேண்டும் என ரணில் மிக நெருக்கமானவர்களிடம் சொல்லியுள்ளார்.
முன்போல இன்னொரு முறை பிரச்சனை வரக் கூடாது என்பதற்காகவே 19வது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து ஜனாதிபதியின் இறகுகளை வெட்ட புதிய சட்டத்தை அமுல்படுத்திக் கொண்டார். ஆனாலும் ஜனாதிபதி சிரிசேனவுக்கு தான் பழைய ஜேஆர் என்ற எண்ணம். மாமா ஜேஆர் உருவாக்கிய சட்டம் நாட்டுக்கு கெடுதலானது என மருமகன் ரணில் சொல்லும் போது , இல்லை ! அதை விட முடியாது என சுதந்திரக் கட்சியினர் விடாப்பிடியாக இருந்தனர். இருப்பினும் 19வது திருத்தச் சட்டம் நிறைவேறியது.
இப்போது ரணில் போராடி நிற்க புதிய சட்டம் துணை நிற்கிறது. உலகம் ரணிலை தவறாக கருதாது. காரணம் இந்த சட்டத்தில் ரணில் 4 1/2 வருடங்கள் வரை பதவி விலகத் தேவையில்லை. அன்று போ என்றதும் போன ரணில் இப்போதும் போய் விடுவார் என தப்புக் கணக்கு போட்டனர். ரணில் இப்போது அசையவே இல்லை. அசையப் போவதுமில்லை.
நீ போ என்ற போது போனது உன்னிடம் நியாமிருந்தது.
இன்று போகாலிருப்பது என்னிடம் நியாயம் இருக்கிறது என்பதே ரணிலின் வாதம்.
அதை சர்வதேசங்களே ஏற்றுக் கொள்கின்றன.
நியாத்துக்காக தலை வணங்கலாம்
அநியாயத்துக்காக தலை வணங்க வேண்டியதில்லை.
- அஜீவன்


Ajeevan Veer : இலங்கை அரச பிரதிநிதிகளை கண்டு கொள்ளாத மாலைதீவு. சந்திரிகாவுக்கு அமோக வரவேற்பு!
இன்றைய மாலைதீவு வரவேற்பில் சிரிசேன சார்பாக கலந்து கொண்ட வெளிநாட்டு அமைச்சர் சரத் அமுணுக மற்றும் சைபர் முஸ்தாபா ஆகியோர் சென்றிருந்தனர். அவர்களுக்கு இரண்டாம் தர மரியாதையே கொடுக்கப்பட்டதாம். விழாவில் கடைசி வரிசையில் உட்கார வைக்கப்பட்டார்களாம். மோடி அவர்களை சந்திக்க சரத் அமுணுகம முயற்சி செய்த போதும் அது கூடவில்லையாம்.
மகிந்த சார்பாக விசேட அனுதியோடு நாமல் ராசபக்ச போயிருந்தார். அவரையும் 4வது வரிசையில் உட்கார வைத்தார்களாம்.
முன்வரிசையில் சந்திரிகா அவர்கள் மட்டுமே இலங்கை சார்பாக கௌரவிக்கப்பட்டுளார். மோடி மிக நெருக்கமாக சந்திரிகாவோடு பல விடயங்களை பேசயுள்ளதாக அறிய முடியகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக