ஞாயிறு, 18 நவம்பர், 2018

எழும்பூர் ரயில் நிலையத்தில் 1800 கிலோ நாய் இறைச்சி பறிமுதல்


தினத்தந்தி : சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 1800 கிலோ நாய் இறைச்சி  கொண்டுவரப்பட்டதால்   பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எழும்பூர் வந்த ஜோத்பூர் -  மன்னார்குடி விரைவு ரயிலிருந்து இறக்கப்பட்ட பார்சல்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீரென சோதனை செய்தனர்.  அப்போது அந்த பார்சலில்  இருந்த 1800 கிலோ  இறைச்சியும், நாய் இறைச்சி என அதிகாரிகள் தெரிவித்தனர்.   பார்சல்கள் அனைத்தும் சென்னையை சேர்ந்த கணேஷ் என்பவரின்  முகவரிக்கு அனுப்பபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதனை கைப்பற்றிய அதிகாரிகள் சென்னையில் உள்ள  ஓட்டல்களில்  ஆட்டு இறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சி பயன்படுத்தப்பட்டு வருகிறதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக