ஞாயிறு, 4 நவம்பர், 2018

உல்லாசமாக இருந்தோம்.. கல்யாணத்தை பத்தி பேச்சு எடுத்தா..தள்ளி விட்டேன்.. செத்துட்டா!

ஆத்திரப்பட்டாள்tamil.oneindia.com - hemavandhana.:புதுக்கோட்டை:  "தைல மரக்காட்டில் உல்லாசமாக இருந்தபோது என் கல்யாணத்தை பத்தி பேச்சு எடுத்தேன்.. அப்போதான் என்கிட்ட சண்டை போட்டா.. தள்ளி விட்டேன்.. இப்படி செத்து போய்டுவான்னு எனக்கு தெரியாது" என்று உயிரிழந்த கஸ்தூரி பற்றி திடுக் தகவல்களை வெளியிட்டுள்ளார் நாகராஜ்!!
 கவிழ்த்திய நாகராஜ்புதுக்கோட்டையில் உள்ள கிராமம்தான் குளமங்கலம் வடக்கு. இங்கு 28 வயதான கஸ்தூரி என்பவர் வறுமை காரணமாக மெடிக்கல் ஷாப் வேலைக்கு போனார். கஸ்தூரியின் உழைப்பு, திறமையை பார்த்த முதலாளி மெடிக்கல் ஷாப்பை பார்த்துக் கொள்ளும்படி முக்கியமான பொறுப்பையும் தந்தார்.
அப்போதுதான் நாகராஜ் என்பவர் பழக்கமாகி இருக்கிறார். வெறும் பத்தே நாளில் கஸ்தூரியை தன் வலையில் வீழ்த்திசாய்த்து விட்டார் நாகராஜ். அப்படியே மெல்ல மெல்ல பேசி தனியாக வந்து சந்திக்கும் அளவுக்கு கஸ்தூரியை கவிழ்த்துவிட்டார். அப்படி கடந்த 28-ம் தேதி போன வீட்டை விட்டு போன கஸ்தூரி திரும்பி வரவேயில்லை.
மறு வாக்குமூலம் :  பிறகுதான் ஒரு வாய்க்காலில் சாக்குப்பையில் கஸ்தூரி பிணமாக மீட்கப்பட்டு, தைலமரக்காட்டில் நாகராஜனுடன் உல்லாசமாக இருந்தபோது கொலை செய்ததாக தெரியவந்து... அதன்பிறகு உறவினர்கள் சாலை மறியல் என இறங்க... ஒருவழியாக நாகராஜ் போலீசில் சரணடைந்தார். கைது செய்து 3 நாள் ஆகியும் தற்போதுதான் நாகராஜ் போலீசாரிடம் வாயே திறந்துள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது இந்த கொலை குறித்து நாகராஜ் மறுவாக்குமூலத்தில் சொன்னதாவது:
ஆத்திரப்பட்டாள் : "ரொம்ப சீக்கிரத்திலேயே என் வலையில் கஸ்தூரியை விழவைத்து உல்லாசமாக இருந்தேன். 28-ம் தேதியும் அப்படித்தான் இருவரும் இருந்தோம். அந்த நேரத்தில் எனக்கு கல்யாண ஏற்பாட்டை என் வீட்டில் செய்துக்கிட்டு இருக்காங்க. அதுக்காக பொண்ணு பாக்கதான் என் பாட்டிகூட போயிருக்காங்க...ன்னு சொன்னேன். இதை கேட்டதும் கஸ்தூரி ஆத்திரப்பட்டாள். "என்னை முழுசா அனுபவிச்சிட்டு, ஏமாத்திட்டு, வேற பொண்ணுகூட உனக்கு கல்யாணமா? என்று சண்டை போட்டாள்.

சடலத்தை மறைக்க உதவி :  இந்த சண்டையிலதான் நான் அவளை தள்ளிவிட்டேன். அதனால பக்கத்தில இருந்த சுவற்றில் போய் முட்டி மோதி இறந்துட்டா.. ஆனா அவள் சாகணும்னு நான் நினைக்கல. இப்படி கஸ்தூரி செத்துபோயிடவும் சடலத்தை என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சேன். அப்போதான் என் சொந்தக்காரங்க எனக்கு உதவி செஞ்சாங்க" இவ்வாறு நாகராஜ் கூறினார்.

குடும்பத்தார் உடந்தை : இப்போது கஸ்தூரி கொலையில் நாகராஜூடன் குடும்பத்தாரும் சம்பந்தப்பட்ட விஷயமே தற்போதுதான் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அதனால் கொலையில் உடன்பட்டவர்கள் யார் என்பது குறித்து அவர்கள் மீதும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எனவே கஸ்தூரி கொலையில் உடந்தையானவர்களும் விரைவில் கைதாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக