ஞாயிறு, 14 அக்டோபர், 2018

காருண்யா குழுமம்.. ஏசுவால் கோடீஸ்வரகள் ஆகிய ஒரு குடும்பம்

இராமச்சந்திர மூர்த்தி.பா : யார் இந்த காருண்யா குழுமம் .. : ??
நெல்லை மாவட்டம், சுரண்டை என்னும் ஒரு கிராமத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த தினகரன் தான் வகித்து வந்த வங்கி கிளார்க் வேலையை உதறிவிட்டு அதை விடப் பல மடங்கு லாபம் தரக்கூடிய “யேசு அழைக்கிறார்!” என்ற பிரார்த்தனைக் கூட்டத்தை நடத்தத் தொடங்குகிறார் எம்பதுகளின் தொடக்கத்தில்.
அளவுக்கு அதிகமாக ஜெபக் கூட்டங்களை நடத்த அவருக்கு அயல்நாட்டு நிதி வர தொடங்குகிறது, அதை வைத்து எண்பதுகளின் மத்தியில் குறைந்த விலையில் கோயம்புத்த்தூரில் வாங்கிய நிலத்தில் காருண்யா கல்வி அறக்கட்டளை சார்பாக பொறியியல் கல்லூரி துவங்கப்படுகிறது அதிலும் மிக அதிகமான பணம் வெளுக்கத் தொடங்கிய பிறகு, தமிழகம் முழுக்க பரவலாக நிலம் வாங்கிக் குவிக்கபடுகிறது.
2006-ஆம் ஆண்டு காருண்யா கல்லூரி நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாறிய பிறகு, அவர்களின் சொத்து மதிப்பு தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியது. 2008-இல் தினகரன்தீவிர நோய்க்கு ஆட்பட்டு இறக்கும்போது அவரின் சொத்து மதிப்பு சுமாராக 45,000 கோடி ருபாய்கள் மடடுமே!!!


மாபெரும் மோசடியாக, திறமையாக வடிவமைக்கப்பட்ட புத்தம் புதிய வியாபார உத்தியுடன் புனிதமான மதத்தின் பெயரால் பல கள்ளப் பிரசங்கிகள் தோன்றி, ”எங்கள் ஜெபத்தால் முடவன் ஒலிம்பிக்கில் ஓடுவான், குருடன் கலர் திரைபடம் பார்ப்பான், செவிடன் இளையராஜா இசை கேட்பான், ஊமை லியோனி பட்டி மன்றத்தில் பேசுவான்,” என்று கலர்கலராக பொய்களைச் சொல்லி, அப்பாவி மக்களின் மூளையைக் சலவை செய்து, அவர்களை மனநோயாளிகளாக்கி, அவர்களிடமுள்ள பணத்தையும், பொருளையும் மறைமுகமாக கோடி கோடியாகக் கொள்ளையடித்து வருகிறார்கள் இந்த நவீன திருடர்கள்.
இவர்களுக்கு ஏதாவது உடல் நல குறைவு வந்தால் மருத்துவமனைக்கு போகிறார்கள் ஆம் முடவனை நடக்க வைக்கும் தினகரனின் மகள் ஏஞ்சல் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்த போது இவரால் உயிர் கொடுக்க முடிய வில்லை... அது போல தனக்கு " கிட்னி ஆப்ரேஷன்" செய்து கொள்ள அமெரிக்க-புரூக்ளின் ஆஸ்பத்திரிக்குப் போனார். ஆனால் கண் தெரியாதவர்களுக்கு கண் பார்வையை கொண்டு வந்து விடுவாராம், நல்ல காமடி.
#யேசுவின்_கோடீஸ்வரர்கள்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக