சனி, 13 அக்டோபர், 2018

தாலி அணியாத கிராமம் .. 1000 குடும்பங்கள் திருமணம் ஒப்பந்தம் மட்டும்

Isai Inban : விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செக்கடி குப்பம் மற்றும் அதை
சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பெண்கள் தாலி அணிவதில்லை. பெரியாரின் திராவிட கொள்கையை வழிவழியாக இந்த கிராம மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார், மேல்மலையனூருக்கு வந்தபோது பெண்களின் முக்கியத்துவம் குறித்து பேசியுள்ளார். சுயமரியாதை திருமணம் குறித்தும், பெண்களை தாலி அணியச்சொல்வது அவர்களை அடிமைப்படுத்தும் செயல் என்றும் உணர்ச்சி பொங்க பெரியார் பேசியது கிராமத்தினடையே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அன்றுமுதல் இன்றுவரைஇந்த கிராமத்தில் சுயமரியாதை திருமணம் நடைபெற்று வருகிறது. திருமணத்தின்போது வரதட்சணை வாங்குவது இல்லை. சாதி பாகுபாடு பார்ப்பதில்லை. மணப்பெண்ணுக்கு தாலி அணிவிப்பது இல்லை. மேலும் திருமணத்தின்போது திருமணம் ஒப்பந்தம் மட்டும் செய்து கொள்கின்றனர்.


இந்த கிராமம் மட்டும் அல்லாது மேல்மலையனூர் அருகே கோட்டைபூண்டி பஞ்சாத்திற்கு உட்பட்டகோட்டுவன் குப்பம், அதியந்தல், கோவில்புறையூர் கிராமங்களிலும் சுயமரியாதை திருமணம்தான் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக செக்கடி குப்பத்தில் வாழ்ந்துவரும்85 வயதான அர்ஜுனன் கூறியதாவது’ இந்த கிராமத்தில் வாழும் 1000 குடும்பங்கள் திருமணம் ஒப்பந்தம் மட்டும் செய்துகொண்டுதான் வாழ்ந்து வருகின்றனர். இங்கே பெண்கள் தாலி அணிவது கிடையாது.கடந்த 50 வருடங்களாக இதை பின்பற்றி வருகிறோம்’’என்று கூறினார்.
85 வயதான அர்ஜுனனுக்குதான் முதல் சுயமரியாதை திருமணம் நடைபெற்றுள்ளது. 1968 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி தனியரசு என்பவரை திருணம் செய்துகொண்டார். இவர்களுக்குபெரியார் என்ற மகன் உள்ளர். இவரது மகன் பெரியார்ஈ.வெ ராமசாமி பெயரில் பள்ளி நடத்தி வருகிறார்.
மேலும் இந்த கிராமங்களில்பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கு தமிழ் பெர்யர்கள்தான் சுட்டப்படுகிறது.விடுதலை விரும்பி, மதியழகன், தமிழ்தென்றல், செந்தமிழ் கன்னி, தேனரசு போன்ற பெயர்கள் குழந்தைகளுக்கு சூட்டப்படுகிறது.
1960 ஆம் ஆண்டில் இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் சாராயம் காய்ச்சும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும், பெரியாரின் பேச்சுத்தான் மக்களின் மனநிலையை மாற்றியது என்றும் கிராம மக்கள் கூறுகின்றனர்.
Isai Inban

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக