வியாழன், 27 செப்டம்பர், 2018

தகாத உறவு கிரிமினல் குற்றம் இல்லை ... ஆனால் மணமுறிவு பெறலாம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

தகாத உறவு கிரிமினல் குற்றம் இல்லை, ஆனால் அது விவாகரத்து பெறுவதற்கான காரணமாக இருக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Samayam Tamil டெல்லி: தகாத உறவால் யாரும் தற்கொலைக்கு தூண்டப்படாத வரையில் அது கிரிமினல் குற்றம் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. />இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 497ஐ நீக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. />திருமணமான பெண் தன் கணவரின் அனுமதியின்றி வேறொரு ஆணுடன்
;தகாத உறவு கொள்வது தண்டனைக்குரிய குற்றம். ஆனால், இதில் சம்பந்தப்பட்ட பெண் தண்டிக்கப்படமாட்டார். சம்பந்தப்பட்ட பெண்ணுடன் தகாத உறவு கொண்ட ஆண் மட்டுமே தண்டிக்கப்படுவார்.


இச்சட்டப்பிரிவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பில், "கணவர் ஒரு பெண்ணுக்கு எஜமானர் அல்ல. திருமணத்திற்கு பின் தகாத உறவு கொள்வது, யாரையும் தற்கொலைக்குத் தூண்டாத வரை கிரிமினல் குற்றம் ஆகாது." என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார். />மேலும், “திருமண பந்தத்திற்குப் பின் தகாத உறவு குற்றச்செயலாக ஆகாது. ஆனால், திருமண பந்தத்திற்கு ஓர் முடிவாக அமையலாம்.”, “தகாத உறவுக்கு தண்டனை வழங்குவது அரசியலமைப்புக்கு எதிரானது.”, “சட்டப்பிரிவு 497 பெண்களின் பாலியல் சுதந்திரத்தை பாதிக்கிறது.” எனவும் இத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக