வியாழன், 27 செப்டம்பர், 2018

அமித் ஷா : உண்மையோ பொய்யோ சமுகவலையில் எதையாவது கிளப்புங்கள்! தொண்டர்களிடம் அமித் ஷா அட்வைஸ்

உண்மையோ பொய்யோ எதையாவது கிளப்பி விடுங்கள் - அமித்ஷா தொண்டர்களிடம் பேச்சுமாலைமலர் :உண்மையா பொய்யோ நாம் நினைக்கும் செய்தியை பரப்பலாம் என ராஜஸ்தானில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சி தலைவர் அமித்ஷா தொண்டர்களிடம் பேசியுள்ளார். ஜெய்ப்பூர்:< ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அவர் கூறுகையில், “உண்மையோ பொய்யோ நாம் நினைக்கும் செய்தியை பகிரலாம். சுமார் 32 லட்சம் பேர் நம் வாட்ஸப் குரூப்களில் உள்ளனர். இதனால், எதையும் வைரலாக ஆக்கலாம்” என அவர் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
“சமீபத்தில் சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் அவரது தந்தையான முலாயம் சிங்கை அடித்து விட்டதாக வாட்ஸப்பில் புரளி பரவியது. உண்மையில் அப்படி நடக்கவில்லை என்றாலும் அது வைரலானது. நம்மிடம் செய்தியை மக்களிடம் கொண்டு செல்லும் தகுதி உள்ளது.

அதனால், உண்மைத்தண்மையை பற்றி கவலைப்பட வேண்டாம்” எனவும் அமித்ஷா பேசினார். அமித்ஷாவின் பேச்சை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ள அகிலேஷ் யாதவ், “நாட்டின் ஆளுங்கட்சி தலைவர் பொய்களை பரப்ப தனது தொண்டர்களை எப்படி தூண்டிவிடுகிறார். அரசின் மீது உள்ள பல்வேறு பிரச்சனைகளை மறைக்க இப்படி பொய்களை பரப்ப பாஜக முயற்சிக்கிறது. இடைத்தேர்தல் தோல்வியை போல வரும் அனைத்து தேர்தலிலும் அக்கட்சி தோல்வியை சந்திக்கும்” என பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக