வியாழன், 27 செப்டம்பர், 2018

திலீபன் - 32 கிழக்கு மாகாண சிறுவர்களை கொன்றொழித்த திலீபனின் கறைபடிந்த ...

Vijaya Baskaran : திலீபன்-  இலங்கையில் திலீபன் ஒரு வரலாற்றுப் பதிவுக்கு
உரிய பெயர் என்பது மறுக்க முடியாதது.ஆனால் அவர் வாழ்வும் மரணமும். விமர்சனத்துக்கு உரியது.
இந்திய இராணுவத்தின் வருகையின் பின்பு மக்கள் மனதில் பாரிய மாறுதல்களும் சந்தோசங்களும் மீள திரும்பின.ஊரெங்கும் பறந்த புலிக்காடிகள் காணாமல் போயின.
உத்தேச மாகாண சபையின் நிர்வாகத்துக்கு புலிகள் பூரண உரிமை கோரினார்கள்.ஆனால் இந்திய அரசு ஈ.பி.ஆர.எல.எப் ஐயும் தமிழர் விடுதலைக் கூட்டணியையும் இணைக்க வலியுறுத்தியது.புலிகள் அதை விரும்பவில்லை.இதனை திசை திருப்பவே மக்கள் கவனத்தை ஈர்க்க உண்ணாவிரதம் நாடகம் ஆரம்பிக்கப்பட்டது.உண்மையில் திலீபன் தான் பலிக்கடா ஆவார் என்று எதிர்பார்க்கவில்லை .புலிகளும் அவரை பலிக்கடா ஆக்கும் எண்ணத்திலும் இருக்கவில்லை.
திலீபன் உண்ணாவிரதத்தை தடுக்க இந்திய இராணுவமோ அல்லது டிக்சிற் அவர்களோ வருவார்கள்.அவர்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் நின்று எரிச்சலூட்டும் நடவடிக்கை மேற்கொண்டால் இராணுவம் மக்களை தாக்கும்.அதன்மூலம் மக்கள் கவனத்தை மறுபடியும் தம்பக்கம் கொண்டுவர முடியும் என புலிகள் நம்பினார்கள்.ஆனால் இந்திய இராணுவமோ ,இந்திய அரசோ கண்டுகொள்ளவில்லை .இதன் காரணமாக தவிர்க்கமுடியாமல் திலீபன் பலியாக்கப்பட்டார்.
திலீபன் நல்ல மனிதர் அல்ல.புலிகளின் ரெலோ அமைப்பினர் மீதான திடீர் தாக்குதலால் அந்த அமைப்பு நிலை குலைந்தது. பலர் உயிரோடு எரிக்கப்பட்டனர்.பலர் தப்பி ஓடினர்.இவ்வாறாக சங்கானையில் மாவடி என்னும் இடத்தில் உள்ள ரெலோ உறுப்பினர்கள் தப்பி ஓடிவிட்டனர்.அதில் கிழக்கு மாகாண உறுப்பினர்களின் வயதில் குறைவான சகோதர்ர்கள் பாதுகாப்பு கருதி இடம்பெயர்ந்து வந்து அங்கே தங்கியிருந்தனர்.அவரகள் அனைவரும் 15 வயதுக்கு குறைவானவர்கள்.அமைப்பில் அங்கம் வகிக்காதவர்கள்.

இந்த முகாமை தாக்கவந்த புலிகள் அங்கே எல்லோரும் தப்பி ஓடிவிட இந்த சிறுவர்களைச் கண்ட புலிகள் விட்டுவிட்டு சென்றனர்.அந்த பிரதேசத்தில் ஒரு வயதான பெண்ணுடன் திலீபனுக்கு நெருக்கமான உறவு இருந்தது.அங்கே வந்த திலீபன் தமது உறுப்பினர்கள் சொன்ன தகவலைக் கேட்டார்.அப்போது அந்தப்பெண் ஏன் அவரங்களையும் கொல்லவில்லை எனக் கேட்டாராம்.உடனே ரோசம் கொண்ட திலீபன் தனியாகச் விரைந்து அங்கே சென்றார்.சக புலி உறுப்பினர்கள் எவ்வளவோ சொல்லி தடுக்க முயன்றும் திலீபன் கேட்கவில்லை .அப்பாவிகளான ஏதுமறியாத 32 சிறுவர்களை தனி ஒருவனாகவே சுட்டுக்கொன்றான்.
இவன் இறந்தபோது பிரபாகரன் லெப்டினட் கேணல் பட்டம் வழங்கி கௌரவம் செய்தார்.இதுவும் திலீபன் சம்பந்தமான வரலாற்றுப் பதிவில் ஒன்றே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக