சனி, 29 செப்டம்பர், 2018

மணல் கொள்ளையர்களை விரட்டிய போது விபத்து.. விராலிமலை தாசில்தார் உயிரழப்பு

Viralimalai Tahsildar died in a accident
Viralimalai Tahsildar died in a accident புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் காட்டாற்று பகுதியில் மணல் கொள்ளை நடைபெறுவதாக வட்டாட்சியர் பார்த்திபனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கண்காணிப்பு பணிக்காக அங்கு சென்றார்.
அப்போது சிலர் மணலை அள்ளிக் கொண்டிருந்தனர். அவர்களை பிடிக்க சென்றார். வட்டாட்சியரை பார்த்த மணல் கொள்ளையர்கள் தப்பிஓடினர். அவர்களை பார்த்திபன் தனது வாகனத்தில் மற்ற 3 அதிகாரிகளுடன் சென்று விரட்டினார். இதில் ஆவூர் பகுதியில் ஜீப்பின் டயர் வெடித்து அங்கிருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பார்த்திபன் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். மற்ற 3 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து விராலிமலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். /tamil.oneindia.com
By Vishnupriya R"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக