சனி, 29 செப்டம்பர், 2018

வாட்சைப் பொய் செய்தியால் இன்பீப்ம் நிறுவன பங்குகள் சரிந்தது ..

வாட்ஸ் அப் செய்தியால் அடிவாங்கிய நிறுவனம்!மின்னம்பலம்: வாட்ஸ் அப்பில் பரப்பப்பட்ட செய்தி காரணமாக இன்ஃபிபீம் அவென்யூஸ் என்ற நிறுவனத்தின் சந்தை மதிப்பு பங்குச் சந்தையில் ஒரே நாளில் 71 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
ஆன்லைன் மின்னணு வர்த்தக நிறுவனமான இன்ஃபிபீம் அவென்யூஸ் தனது கிளை நிறுவனங்களுக்கு வட்டியில்லா மற்றும் பாதுகாப்பற்ற கடன் வழங்கியதாக சில மாதங்களுக்கு முன் வாட்ஸ் அப்பில் செய்தி பரப்பப்பட்டது. இந்நிலையில் இன்று (செப்டம்பர் 29) இன்ஃபிபீம் நிறுவனத்தின் பங்குதாரர்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று இச்செய்தி வாட்ஸ் அப்பில் மீண்டும் வலம் வர நேற்றைய பங்குச் சந்தையில் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு அதிரடியாகச் சரிந்துள்ளது.
வாட்ஸ் அப்பில் பரவிய இன்ஃபிபீம் நிறுவனத்தின் கணக்கு நடவடிக்கைகள் தொடர்பான இந்த செய்தியானது, பங்குதாரர்களின் இடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதோடு பங்குச்சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 31ஆம் தேதிவரை இந்நிறுவனம் சில நிறுவனங்களுக்கு 135 கோடி ரூ கடன் வழங்கியுள்ளதாக அந்நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்த வாட்ஸ் அப் செய்தியை பரப்பிய ஈக்யூரஸ் நிறுவனத்தைச் சார்ந்தவர்களை என்டிடிவி செய்தி நிறுவனம் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது பதிலளிக்க மறுத்துவிட்டனர். அதைப் போல இன்ஃபிபீம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் இதுகுறித்து பதிலளிக்க மறுத்துவிட்டார். சந்தை ஆலோசனை நிறுவனமான ஈக்யூரஸ் பரப்பியிருந்த வாட்ஸ் அப் செய்தியில் இன்ஃபிபீம் நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளில் மாதத்திற்கு 1500 வணிகர்களைத் தனது சேவையில் இணைத்துவருவதாகவும் அதன் வருவாய் ஆண்டுக்கு 100 சதவிகிதம் வளர்ச்சி கண்டுவருவதாகவும் கூறப்பட்டிருந்தது.
பங்குச் சந்தையில் 71 சதவிகிதம் சரிவைச் சந்தித்துள்ள இன்ஃபிபீம் நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை ரூ.58.45 ஆக உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக