வியாழன், 27 செப்டம்பர், 2018

கானா பாடல்களால் தமிழ் மொழி நரிக்குறவர் மொழியாகிறதாம் நரிக்குறவர் சமுகம் மீது வாந்தி எடுக்கும் சீமான்

ஆலஞ்சியார் :கானா பாடலால் தமிழ் சிதைகிறது தாய் மொழியை நரிக்குறவ மொழியாக
ஆக்கிடாதீங்க : சீமான்.. ..
முதலில் நரிக்குறவர்கள் என்றழைப்பதே தவறு அவர்கள் நெறிக்குறவர்கள் என்கிறார் ஆய்வாளர் ராஜேந்திரன் .. அவர்கள் வாழ்வியல் முறை நெறிபடுத்தபட்டதென்று தன் ஆய்வின் முடிவில் சொல்கிறார்.. ஆம் ..
அவர்கள் தங்களுக்குள் ஒரு வட்டத்தை வரைந்துக்கொண்டு வாழ்பவர்கள் சேர்ந்தே வாழும் பழக்கமும் .. இரவு எத்தனை மணி ஆனாலும் தங்கள் வசிப்பிடத்திற்கு வந்துவிடவேண்டும் .. அதிலும் பெண்கள் அந்திமயங்கும் நேரத்திற்குள் வந்துவிடவேண்டும் ..மீறினால் கூட்டத்திலிருந்து விலக்கிவிடுவார்களென நிறைய சேதிகளை சொல்கிறார்.. சேர்ந்து வாழ்தல், பகிர்ந்துண்ணல், நாடோடி வாழ்க்கை முறையை .. உடை உணவு பழக்கவழங்களில்
தனித்துவமாய் தெரிதல் நம்பிக்கையோடு வாழ்தல் பழைமை சிதைக்காமல் நேர்மையோடு நாணயமான.. தங்களுக்கென்ற நெறிமுறைகளை வகுத்து அதன்படி வாழ்பவர்கள்
அவர்கள் நெறி குறவர்களே தவிர நரிக்குறவர்கள் அல்ல..
அவர்கள் ஒரே இடத்தில் தங்காமல் அடிக்கடி இடம்பெயர்வதால் அரசின் திட்டங்களும் ..சலுகைகள் கிடைப்பதில்லை இப்போதுதான் கொஞ்சம் மாறி குழந்தைகளை கல்விக்காகவும் தங்களின் உரிமைகளை உணர்ந்து நகர்தலை நிறுத்தி ஒரே இடத்தில் வாழ தொடங்கியிருக்கிறார்கள்..


..
நரிக்குறவர்கள் மொழியை தீண்டதகாததைப் போல நினைக்கிறார் அவர்கள் பல இடங்களில் தங்கி பலமொழி கலப்பில் பேசி புதிய மொழிவழங்கத்தை கொண்டிருக்கிறார்கள் எந்தமொழியையும் தாழ்வாக எண்ணுகிற மனநிலை என்பது கூட தரங்தாழ்ந்தது பைத்தியக்காரத்தனம் .. கானா பாடல்கள் அந்த வட்டார /பகுதி மக்களின் மொழியில் பேச பாடபடுவது .. இப்போதும் கூட சில கிராமிய பாடல்களில் விரசங்களும் ஏன் பேச்சுவழக்கில் கூட வந்து விழும் படுகொச்சையான வார்த்தைகளும் அந்த மொழியை கெடுப்பதில்லை .. அது மிகப்பெரிய தாக்குதலை மொழி மீது செலுத்துவதில்லை
கர்நாடக இசை தமிழிசையை சிதைத்ததைப்போல கிராமப்பாடல்களும் Folk songs, கானா பாடல்களும் செய்யவில்லை.. நெறிக்கட்டத்தனமாக நாளொரு பொய்யை பேசி திரியும் செபஸ்டினின் உளறல் இது .. தமிழுக்கு முழு காப்பிரேட் வாங்கி வந்திருக்கிறாரா.. முதலில் தன்னோடு வந்திருக்கிற அரைக்குறைகள் தெளிவாக தவறின்றி தமிழில் எழுத பேச பயிற்சி தரட்டும் பிறகு மற்றவர்களைப் பற்றி கவலைப் படலாம்
...
அதுசரி இவரின் முப்பாட்டன் முருகனின்..?
வள்ளி யார் 😋
..
ஆலஞ்சியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக