வியாழன், 27 செப்டம்பர், 2018

செங்கோட்டையில் விநாயகர் சிலை மீது கல் எறிந்த இந்து முன்னணியினர் ஐய்யப்பன் பேருந்து தாக்குதலில் வசமாக சிக்கினர்

goodnewstamil.com :புதுச்சேரியில் இருந்து சபரி மலைக்கு பக்தர்கள் சென்ற பேருந்தின் மீது செங்கோட்டை அருகே கல் எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கல் எரிந்தவர்களை விரட்டி பிடித்து விசாரித்ததில் அவர்கள் இந்து முன்னணியினர் என்பதும், செங்கோட்டையில் விநாயகர் சிலை மீதும் கல் எரிந்தவர்கள் அவர்கள் தான் என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.
கடந்த 16 ஆம் தேதி, ஜெயக்குமார் என்பவர் தலைமையில் புதுச்சேரியில் இருந்து பக்தர்கள் அனைவரும் பேருந்து மூலம் சபரி மலைக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் வந்த பேருந்து செங்கோட்டையை கடந்து சென்று கொண்டிருந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் பேருந்தில் இருந்த பக்தர்கள் மீது கல் எரிந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள், இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை விரட்டி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துச் சென்றுள்ளனர்.
TN 76 AE 0042 நம்பர் உடைய அந்த இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரையும் காவல்துறையினர் செங்கோட்டையில் வைத்து விசாரணை நடத்தினர்.
காவல்துறை விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவன் தனது பெயர் இஸ்மாயில் என்றும், இன்னொருவன் தனது பெயர் அப்துல் காதர் என்றும் கூறி இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் பேச்சை நம்பாத காவல்துறையினர், துருவி துருவி மேற்கொண்ட விசாரணையில்  ஒருவன் பெயர் முருகேசன் என்றும், இன்னொருவன் பெயர் அருண் என்றும் தெரிய வந்தது. இருவரும் இந்து முன்னணி என்ற அமைப்பில் இருக்கிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
மேலும், இவர்கள் இருவரும் தான் செங்கோட்டையில் கடந்த 14 ஆம் தேதி நடந்த விநாயகர் ஊர்வலத்தின் போதும், சிலை மீது கல் எரிந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

செங்கோட்டையில் நடந்த விநாயகர் ஊர்வலத்தின் போது சிலை மீது கல் வீசப்பட்டவுடன், அந்த பகுதியில் இருந்த இஸ்லாமியர்களின் கடைகள், வாகனங்கள் மற்றும் வீடுகள் மீது இந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே விநாயகர் சிலை மீது கல் எரிந்து செங்கோட்டையில் ஆணுறையை திருடி கலவரம் செய்த இந்துத்துவ கும்பல், தற்போது சபரி மலைக்கு சென்ற பக்தர்கள் மீது கல் எரிந்து இன்னொரு கலவரத்தை செங்கோட்டையில் நிகழ்த்த திட்டமிட்டுள்ளது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காந்தியை கொன்ற கோட்சே, தன்னை இஸ்மாயில் என்று அடையாளப்படுத்தி கலவரத்தை உருவாக்க நினைத்து போல, தற்போது செங்கோட்டையில் கலவரத்தை ஏற்படுத்த நினைத்திருக்கிறார்கள் இந்து முன்னணியினர்.
செங்கோட்டையில் அண்ணன் தம்பிகளாக வாழ்ந்த மக்கள் இன்று பிரிந்து கிடப்பதற்கு இந்துத்துவ கும்பலின் சதியே காரணமாக இருந்துள்ளது. இவர்களின் பொய் பிரச்சாரத்திற்கு இனியும் மக்கள் ஏமாறக்கூடாது என்பதே நல்லிணக்கத்தை விரும்பும் ஒவ்வொருவரின் கோரிக்கையாக உள்ளது.
இந்துக்களுக்காக இருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டே சொந்த இந்து சகோதரர்கள் மீதும், சாமி சிலைகள் மீதும் அவர்களே தாக்குதல் நடத்தி அதன் மூலம் அரசியல் செய்வது இவர்களின் பக்தி எந்த அளவிற்கானது என்பதை ஒவ்வொரு இந்துக்களும் புரிந்து கொண்டால் மட்டுமே கலவரங்களையும், மத வெறுப்பு களையும் கடந்து மக்கள் வாழ முடியும்.
மேலும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி இஸ்லாமியர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.
FIR Report: 415/2018
Sengottai police station

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக