செவ்வாய், 11 செப்டம்பர், 2018

கமலுக்கு தயாரிப்பாளர் : முதலில் உங்கள் அருகில் இருப்பவர்களுக்கு உதவுங்கள்:

Suresh Kamatchi criticize Kamalhaasan!tamiloneindia - Pazhanivel : சென்னை: உங்கள் அருகில் இருப்பவர்களுக்கு நல்லது செய்யுங்கள் என்று சுரேஷ் காமாட்சி கமலை விமர்சித்துள்ளார்.
மங்களேஷ்வரன் இயக்கியுள்ள மரகதக்காடு திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, கமல்ஹாசன் மற்றும் விஷாலை விமர்சித்தார். இப்படத்தின் தயாரிப்பாளரான ஆர்.ஆர்.பிலிம்ஸ் ரகுநாதன் கமல்ஹாசனின் திரைவாழ்க்கையில் முக்கிய பங்காற்றியவர் என்றும், ஆனால் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் செய்ய கமல்ஹாசன் முன்வரவில்லை என்றும் தெரிவித்தார்.
உண்மையில் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்க வேண்டுமென்று நினைத்தால், தயாரிப்பாளர் ரகுவைக் கூப்பிட்டி பாராட்டி இருக்க வேண்டும். இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை கமலை வைத்து வெளியிட ரகுநாதன் முயற்சித்தார் என்பது தெரியும். ஆனால் கடைசிவரை கமலிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. தகவல் வரவில்லையா அல்லது இவர் முயற்சித்தது தெரியவில்லையா எனத் தெரியாது எனக் கூறினார்.

நீங்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று தேவையில்லை. முதலில் உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு நல்லது செய்யுங்கள் அதுவே போதும். மக்களுக்கு நல்லது செய்கிறேன் என ஒரு பனியன் வியாபாரி வந்திருக்கிறார் என்று கிண்டலடித்தார்.
இன்று தண்ணீரை காசு கொடுத்து வாங்குவதற்கு காரணம் நாம் இயற்கையை அழிப்பதுதான் என்று துரைராஜ் பேசினார். சிறு முதலீட்டு தயாரிப்பளர்களுக்கு முன்னோடியாகத் திகழ்பவர் ரகுநாதன் என இயக்குனர் மங்களேஷ்வரன் பேசினார். ஜெய்பிரகாஷின் இசையில் பாடல்கள் வெளியிடப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக