புதன், 5 செப்டம்பர், 2018

நடிகர் விஷாலின் வாகன ஓட்டுனர் மரணம்,,,, விஷால் போதிய உதவி செய்யவில்லை. ..தந்தை குற்றச்சாட்டு

விஷால் உதவியிருந்தால் காப்பாற்றியிருக்கலாம்!
மின்னம்பலம்: நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர், என பல்வேறு பதவிகளை வகித்துவரும் நடிகர் விஷாலின் கார் ஓட்டுநர் பாண்டியராஜ், கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (செப்டம்பர் 4) மரணமடைந்தார்.
நடிகர் விஷாலிடம் கார் ஓட்டுநராகப் பணியாற்றிவந்த பாண்டியராஜ் உடல் நலம் பாதிக்கப்பட்டு சில மாதங்களாக வேலைக்கு வாராமல் இருந்துள்ளார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவரால் பெரிய மருத்துவமனைக்குச் சென்று சரியான சிகிச்சை எடுக்க முடியாத நிலை. ஆனால் இவருடைய உடல்நிலை பற்றி அறிந்தும் விஷால் எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இது குறித்து பாண்டியராஜின் தந்தை “நடிகர் விஷால் நினைத்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம். அவரிடம் இருந்து உரிய நேரத்தில் உதவி கிடைத்திருந்தால் பாண்டியராஜன் உயிருடன் இருந்திருப்பார்” எனக் கூறியுள்ளார்.
ஊருக்கெல்லாம் ஓடிப்போய் உதவுவதாகக் கூறிவரும் விஷால், தன்னிடம் வேலை பார்த்த ஒருவர் உயிருக்குப் போராடிவருவது தெரிந்தும், அவருடைய உயிரைக் காப்பாற்ற உரிய நேரத்தில் உதவாமல் இருந்ததை சமூக வலைதளத்தில் பலர் விமர்சித்துவருகிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக