புதன், 5 செப்டம்பர், 2018

பா.ஜ.,வில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால்.. திருவனந்தபுரம் தொகுதியில்?

கேரளா மக்கள் விவரமானவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஆனானப்பட்ட பிரேம் நஸீரையே அரசியலில் இருந்து விரட்டியவர்கள். dhinamalar :நடிகர்களை சினிமாவில் மட்டுமே ரசிப்பவர்கள்
புதுடில்லி : பிரபல மலையாள நடிகர் மோகன்லால், பா.ஜ.,வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2019 லோக்சபா தேர்தலில் அவரை திருவனந்தபுரம் தொகுதியில் களமிறக்கவும் பா.ஜ., திட்டமிட்டுள்ளது.
டில்லியில் பிரதமர் மோடியை, பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நேற்று (செப்.3) சந்தித்து பேசினார். பிரதமர் இல்லத்தில் நடந்த இச்சந்திப்பு 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

இந்நிலையில், மோகன்லால் பா.ஜ.,வில் இணைய உள்ளதாகவும், 2019 லோக்சபா தேர்தலில், கேரளாவில், மோகன்லாலை களமிறக்க பா.ஜ., திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருவனந்தபுரம் தொகுதியில், மோகன்லால் போட்டியிடுவார் என்றும், இதனால் கேரளாவில் பா.ஜ., பலம் பெரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக