திங்கள், 27 ஆகஸ்ட், 2018

69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிரான இடைக்கால மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

மாலைமலர் :புதுடெல்லி: தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோருக்கு 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அவ்வப்போது இடைக்கால உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே தமிழகத்தில் இருக்கும் 69 சதவீத இடஒதுக்கீட்டு முறையால் தங்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கவில்லை எனக்கூறி இரண்டு மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பு கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது. இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்டுள்ள மூல வழக்கு நவம்பர் மாதம் விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக