திங்கள், 27 ஆகஸ்ட், 2018

தேங்காய் எண்ணெய்க்கு எதிராக அமெரிக்க போலி ஆராய்ச்சியாளர்கள் .. பின்னணியில் இதர எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள்

Devi Somasundaram : தேங்காய் எண்ணையை ப்யூர் பாய்ஸன் அப்டின்னு
ஹார்வர்ட் யுனிவர்ஸிடியை சேர்ந்த புரோபஸர் ஒருவர் கூறியுள்ளது பரபரப்பை கிளப்பி இருக்கு.. அவர் தகவலுக்கு ஆதாராம் இல்லைன்னு டிஸ்க்ளைம்பரோட யூ எஸ் போஸ்ட் இந்த தகவல சொல்லி இருக்கு ..
https://www.google.co.in/…/s/amp.usatoday.com/amp/1060269002..
அவர் மட்டும் இல்ல அமெரிக்க உணவு கழகம் கூட தேங்காய் எண்ணையில் இருக்கும் ஹை லெவல் சாச்சுரேடட் கொலஸ்ட்ராலுகாக அதை நல்ல எண்ணைன்னு சொல்வதில்லை..
இதில் சாச்சுரேடட் கொலஸ்ட்ரால் லேக்டிக் ஆஸிட் வடிவத்தில் தான் தேங்காய் எண்ணையில் இருக்கு ..அதாவது நல்ல கொலஸ்ட்ரால் வடிவத்தில் தான் இருக்கு கொதிக்க வைக்க பட்டால் அது ப்ரேக் ஆகி சாச்சுரேடட் கொலஸ்ட்ராலாக மாறும்னு சொல்ல படுது .
விஞ்ஞானம் தன் முடிவுகளில் பின் வாங்கிய வரலாறு நிறைய இருக்கு . முட்டை அதீத கொலஸ்ட்ரால்னு அறிவித்து பின் அதை வாபஸ் வாங்கி இருக்கு இந்த ஆய்வு நிலையங்கள்...

அதை கடந்து அனுபவ பூர்வமா எங்க வீட்ல சமையல் முழுவதும் தேங்காய் எண்ணைல தான் செய்வாங்க...கிராமத்துல வீட்ல மரம் இருப்பாதல செக்குல ஆட்டி தேங்காய் எண்ணை பித்தளை அடுக்கில் ஊற்றி மேல வெள்ளை துணி கட்டி வாசல் முற்றதில் வெய்யில் காயும் .மழை வர மாதிரி இருந்தா தூக்கி தாழ்வாரத்தில் வைப்பார்கள் .மறு நாள் மீண்டும் முற்றதில் காயும் ..அந்த பித்தளை அண்டா ல ரெண்டு பேர் உள்ள உட்கார்ந்து குளிக்கலாம் அவ்லோ பெரிசா இருக்கும்..
அதில் தான் எண்ணை எப்பவும் இருக்கும் .ஒரு பிடி வச்ச சில்வர் கப் உள்ள மிதக்கும் .தேவை படும் போது துணி மூடிய அவிழ்த்துட்டு கப்ல மொண்டு பாத்திரத்தில் ஊத்தி கிட்டு திரும்ப மூடி வெய்யிலயே காயும் .
( அத நான் குழந்தையா இருக்கும் போது தண்ணின்னு நினைச்சு மொண்டு மொண்டு மேல ஊத்தி தலைலாம் ஊத்தி குளிச்சதும் . அத்தன எண்ணை போக எரிய எரிய அரப்பு தூள் போட்டு என்னை குளிப்பாட்டினதும் தனி கதை 🚶🚶 ) ..
டெய்லி சமையல், தலைக்கு தேய்ச்சு குளிப்பது, முறுக்கு, சீடை மாதிரி பலகாரம் செய்வது , இட்லி பொடிக்கு ஊத்திப்பதுன்னு அத்தனையும் தேஙகாய் எண்ணைல தான் செய்வாங்க ..
நெய், தேங்காய் எண்ணை ரெண்டு தான் சாப்டுவோம்...நல்ல எண்ணை விளக்கு போட மட்டும் உபயோகிப்பாங்க.. இது கால காலமா எப்பவும் தஞ்சை மாவட்டத்தில் பல குடும்பத்தில் பழக்கம்..
எங்க வீடுகளில் நல்ல ஆ ரோக்கியமா , திடமா தான் இருக்கிறார்கள், 85 வயது வரை தன் வேலைய தானே பாத்துகற அளவு திடமா தான் எல்லோரும் இருக்காங்க. . பெரிசா எந்த வியாதியும் யாருக்கும் வந்ததில்ல.
என் அண்ணன் டாக்டரா இருக்கான்...அவன்கிட்ட இந்த தகவல கேட்டேன்... என்னடா ஹார்வர்ட் யுனிவர்ஸிடி புரோபஸரே இப்டி பேசி இருக்கார்ன்னு கேட்டேன்...
ஹார்வர்ட் யுனிவர்ஸிடில பாரிசாலன், மாரிதாஸ், குருமூர்த்தி மாதிரி ஆட்கள் இருக்க மாட்டார்கள்ன்னு நீ ஏன் நம்பினன்னு கேட்டான்.....ஆமால்ல...ஏன் நம்பினேன் ??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக