ஞாயிறு, 15 ஜூலை, 2018

திரை அரங்குகளின் பங்குகள் சரிவு ... வெளி உணவுகளை உள்ளே எடுத்த செல்ல அனுமதி ... பி வி ஆர் பங்குகள்

தியேட்டரில் ஸ்நாக்ஸ்: பிவிஆர் பங்குகள் சரிவு!
மின்னம்பலம்: சென்னையில் வேளச்சேரி, அமைந்தகரை, பல்லாவரம் ஆகிய இடங்களில் பிவிஆர் நிறுவனத்தின் தியேட்டர்கள் அமைந்துள்ளன. இந்நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியடைந்துள்ளன.
சினிமா தியேட்டர்களுக்குள் வெளி உணவுகளை எடுத்துச் செல்ல அனுமதியளிக்கப்போவதாக மகாராஷ்டிர சட்டமன்றத்தில் அம்மாநில அமைச்சர் ரவிந்திர சவான் அறிவித்திருந்தார். இதன் பிறகு சில மல்டிபிளக்ஸ் நிறுவனங்களின் பங்குகள் சரிந்துள்ளன.
மும்பை பங்குச் சந்தையில் பிவிஆர் நிறுவனத்தின் பங்குகள் 13.1 விழுக்காடு சரிந்துள்ளது. ஐனாக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 5.43 விழுக்காடு சரிந்துள்ளது. தியேட்டர்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளின் விலையைக் குறைத்து சந்தை விலைக்கு நிகராகக் கொண்டுவருவது தொடர்பாக மல்டிபிளக்ஸ் உரிமையாளர்களை மாநில அரசு சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
தியேட்டர்களில் அதிக விலைக்கு உணவுகள் மற்றும் பானங்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து மும்பை உயர்நீதிமன்றத்தில் ஜெய்னேந்திர பக்ஸி என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.
வெளி உணவுகளை தியேட்டர்களுக்குள் எடுத்துச் செல்வதற்கு சட்டரீதியாக எந்தத் தடையும் இல்லை என்பதை அவர் தனது வழக்கில் சுட்டிக்காட்டியிருந்தார். வெளி உணவுகளுக்குத் தடை விதிப்பதன் வாயிலாக, தியேட்டர்களுக்குள் அதிக விலைக்கு உணவுகளை விற்பனை செய்வதாகவும் அவர் கூறியிருந்தார். இந்த வழக்கு ஜூலை 25ஆம் தேதியன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக