ஞாயிறு, 15 ஜூலை, 2018

ஜார்க்கண்டிலும் குடும்பமே தற்கொலை ...ஆறு பேர் .. அதே ஞாயிற்றுக்கிழமை... புராரி தற்கொலைகள் போலவே

6 commit mass suicide in Jharkhand tamil.oneindia.com- lakshmi-priya : ராஞ்சி: புராரி தற்கொலை சம்பவத்தை போல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹசாரிபார் நகரில் ஒரு குடியிருப்பு பகுதியில் 6 பேர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்று பார்த்த போது மகாவீர் மகேஸ்வரி (70), கிரண் மகேஸ்வரி (65), நரேஷ் அகர்வால் (40), அவரது மனைவி பிரீத்தி அகர்வால், இவர்களது குழந்தைகள் அமான் (8) மற்றும் அஞ்சலி (6) ஆகியோர் என்று தெரியவந்தது. மேலும் வீட்டை சோதனையிட்ட போலீஸார் அங்கிருந்த தற்கொலைக்கான கடிதத்தை கைப்பற்றினர். அதில் இந்த குடும்பத்தினர் உலர்ந்த பழங்கள் கடை நடத்தி வந்ததாகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடையை மூடிவிட்டதாகவும் கூறியிருந்தனர்.
மேலும் பணத்தட்டுப்பாட்டால் ஏகப்பட்ட கடன் வாங்கி திருப்பி செலுத்த இயலாததால் இந்த விபரீத முடிவை தாங்கள் எடுப்பதாகவும் கூறியிருந்தனர்.
இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லி புராரி பகுதியில் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக