ஞாயிறு, 15 ஜூலை, 2018

மறைந்த அன்ன தெரசா நிறுவனத்தில் குழந்தைகள் விற்பனை ? தஸ்லிமா நஸ்ருனுக்கு கண்டனம்


மின்னம்பலம்: அன்னை தெரசா தொண்டு நிறுவனத்தின் மீது சர்ச்சைக்குரிய
கருத்தை தெரிவித்த எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரினுக்கு கொல்கத்தாவின் ஆர்ச்பிஷப் பாதர் தாமஸ் டி சௌசா கண்டனம் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின் தனது ட்விட்டரில்,அன்னை தெரசாவின் தொண்டு நிறுவனம் குழந்தைகளை விற்று வருகிறது. இது ஒன்றும் புதிதல்ல. தெரசா தொண்டு நிறுவனம் பல சட்டவிரோத நடவடிக்கைகளிலும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளிலும், அறநெறியற்ற வழிகளிலும், கொள்கையற்ற வழிகளிலும் ஈடுபட்டு வருகிறது. மேலும் அது மோசடி வேலைகளிலும், காட்டுமிரண்டித்தனமான வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. கிரிமினல்கள் பிரபலங்கள் என்பதால் அவர்களைப் பாதுகாப்பதற்கு முயற்சிக்க வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக தாமஸ் டி சௌசா வெளியிட்டுள்ள கண்டன செய்தியில் தஸ்லீமா நஸ்ரின் இரக்கமற்றவராகவும் பொய்யராகவும் உள்ளார். இது உண்மை கிடையாது. நஸ்ரின் என்னதான் கூறினாலும் அன்னையின் புகழை சீர்குலைக்க முடியாது.அவர் என்ன செய்தார்? அவர் எதற்காக வாழ்ந்தார் என்பதற்கும், அன்னையின் புனிதத்திற்கும் உலகமே சாட்சியாக இருக்கிறது. யார் என்ன கூறினாலும் அது அன்னையின் ஒழுக்கத்திற்கு களங்கம் விளைவிக்காது என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக